அனுமதி இன்றி மது விற்றவர் கைது

மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.
அனுமதி இன்றி மது விற்றவர் கைது
Published on

ஈரோடு, 

கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.செட்டிபாளையம், தடப்பள்ளி வாய்க்கால் கரை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் நம்பியூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (58) என்பதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com