என் மலர்
ஈரோடு
- ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார்.
- சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜாகிர் உசேன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜாகிர் உசேன் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில சீட் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கடலூரை சேர்ந்த சந்திர மோகன் என்பவர், ஜாகிர்உசேனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உங்கள் மகளுக்கு சீட் வாங்கித் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை ஜாகிர் உசேன் உண்மை என்று நம்பியுள்ளார். பின்னர் சந்திரமோகன் அவரிடம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறாக ஜாகிர் உசேனிடம் இருந்து சந்திரமோகன் பல தவணைகளாக மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியது போன்று மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. தொடர்ந்து ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார். இதனை அடுத்து போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகிர் உசேன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்து வந்த சந்திரமோகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.
மேலும் சந்திர மோகனிடம் நடத்திய விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும் அதன் மூலம் ஜாகிர்உசேனின் எண்ணை அறிந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது கடலூரில் பணம் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
- கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையொட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது. மேலும் அணை மேற்பகுதியில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப்பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர்.
இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகுதியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானிசாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
- திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளான வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், தங்கராஜ் மற்றும் காமராஜ், மாரப்பன், கோவிந்தன், சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.
- இதில் 568 ரேஷன் கடைகளை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
ஈரோடு:
மகளிர் உரிமைத்தொ கையாக மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக முதல் கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் விநியோகம் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது.
அப்போது விண்ணப்பம் பெறாத வர்கள், வீடு பூட்டி இருந்தது போன்ற காரணத்துக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விண்ணப்பதா ரர்களுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வரும் 4-ந் தேதி வரை பதிவேற்ற முகாம் நடந்து வருகிறது. இந்த பணியில் இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், வருவாய் துறையி னர், கூட்டுறவு துறையினர் என மொத்தம் 3 ஆயிரத்து 177 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.
இதில் 568 ரேஷன் கடை களை சேர்ந்த வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படு கிறது. ரேஷன் கடை ஊழி யர்கள் தங்கள் பகுதியில் ஒதுக்க ப்பட்ட ஒவ்வொரு வீடுகளாக சென்று மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ண ப்பம் வழங்கி வருகின்றனர்.
வரும் 4-ம் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.அதைத்தொடர்ந்து வரும் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 544 இடங்களில் பதிவேற்ற முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 532 ரேஷன் அட்டை தாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு ள்ளன.
- ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 ஐ தாண்டியது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் தக்காளி விலை கிலோ ரூ.160 வரை விற்பனை யானது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 150 வரை விற்பனையானது.
இதனை அடுத்து அரசு மாற்று ஏற்பாடாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 ரேஷன் கடைகளில் மலிவு விலை யில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு கொல்ல ம்பாளையம் கூட்டுறவு அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
10 கடைகளிலும் தலா 100 கிலோ வீதம் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக விலை உயர்வால் தக்காளி வாங்கி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.
- தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
- இந்த விழிப்புணர்வு வார விழா இன்று முதல் வரும் 7-ந் தேதி வரை நடக்கிறது.
ஈரோடு:
சிசு மரணங்களை குறைக்க, ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த குழந்தைகள் உருவாக, மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்க தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மை, வழங்காத தால் ஏற்படும் குறைபாடு குறித்து சமுதாய கூடங்கள், தாய்ப்பால் புகட்டும் பெ ண்கள், பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செவிலியர், மாணவர் வாயிலாக விழிப்புணர்வு வழங்கப்படும்.
இந்த விழிப்புணர்வு வார விழா இன்று முதல் வரும் 7-ந் தேதி வரை நடக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தாய் சேய் நல விடுதிகள், சத்துணவு மையங்களில் பாலூட்டும் தாய்மார் களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.
தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு ஊட்ட ச்சத்தும், புத்தி கூர்மையும் கிடைக்கும். தாய்- சேய்க்குள் ஆரோக்கி யமான உறவு வளரும். தாய்ப்பால் புகட்டாத குழந்தைகள் நோய் வாய்ப்பட்டு இற ப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.
ஈரோடு:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- பிச்சாண்டம்பாளையம் கிராமத்துக்கு 300 பழச்செடிகள் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு சில நாள்களில் மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு தோட்டக் கலை த்துறை உதவி இயக்குனர் வினோதினி கூறியதாவது:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு (2023-2024) ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்துக்கு உள்பட்ட பிச்சாண்டம்பாளையம் கிராமம் தேர்வு செய்ய ப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் தோட்ட க்கலை துறையின் சார்பில் 80 சதவீத வளர்ச்சி திட்டப்பணிகளை முன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற நடவடி க்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பிச்சாண்டம் பாளையம் கிராமத்துக்கு வீடுகளின் பின்புறம் உள்ள காலி இடங்களில் பழச்செ டிகள் வளர்ப்பை மக்க ளிடையே ஊக்குவிக்கும் வகையில் மா, கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா ஆகிய 5 பழச்செடிகளை கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது. ரூ. 200 மதிப்பிலான ஒரு தொகுப்புக்கு ரூ. 150 மானியம் ஆகும்.
பயனாளிகள் ரூ.50 மட்டும் செலுத்தி பெற்று க்கொள்ளலாம். இதனை பெற பயனாளிகள் தங்களது ஆதார், ரேஷன் அட்டை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 675 பழச்செடிகள் தொகுப்பு வழங்கிட ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பிச்சாண்டம்பாளையம் கிராமத்துக்கு 300 பழச்செடிகள் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.
தவிர தோட்டக்கலைத் துறை சார்பில் தக்காளி, வெங்காயம் நாற்றுகள், நிலப்போர்வை அமைத்தல், தேனி பெட்டிகள் நிறுவுதல், மண்புழு உரக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் பிச்சாண்ட ம்பாளையம் கிராமத்தில் செயல்படுத்தப் படவுள்ளன.
மேலும் இக்கிராமத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டு ள்ளது. இதில் இல்லத்தரசிகள் எவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பது, மாடித்தோட்டம் அமைக்க ஏற்ற இடங்கள், மாடித் தோட்டம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து, மாடித் தோட்ட முன்னோடி விவசாயியான ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த கோமதி இல்லத்தரசிகளுக்கு பயிற்சியளித்தார்.
இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான தொகுப்புகளை பெற ஆன்லைன் மூலமாகவும் விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில நாள்களில் மாடித் தோட்ட தொகுப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 26 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.
ஈரோடு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) மற்றும் பி.டி.எஸ் (பல் மருத்துவம்) போன்ற படிப்பிற்கு நீட் தேர்வு தேர்ச்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நீட் தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி களில் படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள், 15 மாணவிகள் என 21 பேர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். பட்டம் படிக்க மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.
இதேப்போல 4 மாணவிகள் உள்பட 5 பேரும் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் பட்டம் படிக்க சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதில் ஒருவர் மட்டும் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.
மீதமுள்ள 25 பேரும் 2-ம் முறை நீட் தேர்வு எழுதி அரசின் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ளதை மாவட்ட கல்வித்துறையினர் உறுதி செய்தனர்.
- சுற்றுலா தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.
- அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஈரோடு:
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது முக்கிய அறிவிப்பாகும்.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர்,
உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பா ட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர்,
கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல்,
சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுப வர்கள் மற்றும் நிறுவனங்க ளுக்கு உலக சுற்றுலா தினமான வருகின்ற செப்டம்பர் மாதம் 27-ந் தேதி விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணைய தளத்தின் வாயிலாக வரும் 15-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கள்ளப்படுகிறது.
மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், 7-வது தளம் புதிய கட்டிடம், ஈரோடு மற்றும் தொலைபேசி எண்.0424-2253522, 7397715683 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளது.
- அணைக்கு 2,872 கனஅடி நீர்வரத்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதார மாகவும் உள்ளது பவானி சாகர் அணை.
இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகு தியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொட ர்ந்து அதிகரித்து வந்தது.
பின்னர் மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளது. அணைக்கு 2,872 கனஅடி நீர்வரத்து வருகிறது.
அணையில் இருந்து காலி ங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்தி ற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி,
கீழ்பவானி வாய்க்கா லுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வரப்பாளையம், கடத்தூர், ஈரோடு டவுண், கோபி போலீசார் அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட சரகங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்ட விரோத மாக மது விற்றுகொண்டி ருந்த பெரிய சோமூர் ஆனந்தன் (49), ஈரோடு மாரப்பன் தெரு பூங்கோதை (38), சிங்கம்பேட்டை சரவ ணன் (58),
அம்மாபேட்டை சுப்பிரமணி (60), தர்மபுரியை சேர்ந்த அகிலன் (30), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கௌரி சங்கர் (37), ராயர்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்த 32 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்த கோபி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (25), தமிழ ரசு (23) ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






