என் மலர்
ஈரோடு
- கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது
- வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டது
ஈரோடு:
வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தபடும் அஞ்சூர் கிராமத்தில் நீடித்த நிலை யான கரும்பு சாகுபடி தொழி ல்நுட்பங்கள்குறித்த பயிற்சி நடைப்பெற்றது. இந்த பயிற்சிக்கு கொடுமுடி வட்டார வேளா ண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் சுரேஸ் (ஈ.ஐ.டி.பாரி) நாற்றாங்கால் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், சர்க்கரை ஆலை இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
வேளாண் அறிவியல் நிலையம் பூச்சியல் துறை டாக்டர் கணேசன் கரும்பு பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய் பற்றிய ஒருங்கிணைந்த மேலா ண்மை குறித்து விளக்கினார். மேலும் துணை வேளா ண்மை அலுவலர் ராஜா மணி கலந்து கொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் உழவன் செயலி, வாடகை, அக்ரி கார்ட், மானிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அலு வலர் ரேகா உயிர் உரங்கள் பயன்பாடுகளை விளக்கி னார். மேலும் உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- காசிபாளையம், வில்லரசம்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யபடுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் காசி பாளையம் துணை மின்நி லையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொ ள்ள இருப்பதால் இத்துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சூரம்பட்டி வலசு, அணை க்கட்டு ரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதா கிருஷ்ண ன் சாலை, கோவலன் வீதி, காம ராஜர் வீதி 1,2,3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1,2,3, சாஸ்திரி சாலை 1,2, ரெயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடை யம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதி பதிபா ளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பா ளையம், பச்சப்பாளி, செந்தி ல்நகர், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பா ளையம் ஹவுசிங் யூனிட் பி.ஹெச்1-8, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பா ளையம் பாலாஜி நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கபெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளைவீதி, கள்ளு க்கடைமேடு மற்றும் பழைய ரெயில் நிலைய பகுதிகளில் வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வில்லரசம்பட்டி துணை மின்நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வி.ஜி.வலசு, வேணுபுரம், கிருஷ்ணாகார்டன், முனிய ப்பம்பாளையம், பாரதியார் நகர், எல்.ஐ.சி. நகர், கைகாட்டி வலசு பகுதி மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை செயற்பொ றியா ளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.
- மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
- உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஈரோடு:
உலக அளவில் 80 சதவீதம் மஞ்சள் உற்பத்தி நடைபெறும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் மூட்டைகள் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் தமிழகத்தில் ஈரோடு என 3 இடங்களில் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தைகள் உள்ளன. தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்து ஈரோட்டில் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை சரிவடைந்த நிலையில், இந்த ஆண்டு உலக அளவிலும், உள்நாட்டிலும் தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சள் விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும், மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழையினால் மஞ்சள் தரம் குறைந்துள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 மாதத்தில் விலை இரு மடங்கு உயர்ந்து ஒரு குவிண்டால் மஞ்சள் 15 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது.
இந்நிலையில் உலக அளவில் தேவை அதிகரிப்பால் கடந்த 6 மாத காலத்தில் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 86 ஆயிரத்து 92 டன் மஞ்சள் ஏற்றுமதியான நிலையில், இந்த ஆண்டு 6 மாத காலத்தில் 18 ஆயிரத்து 927 டன் அதிகரித்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 19 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மஞ்சள் ஏற்றுமதியில் புதிய மைல் கல் என்றும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல், அடுத்த ஆண்டு பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்பினால், உள்நாட்டு விற்பனையும் அதிகரித்து, பல நிறுவனங்கள் கூடுதலாக மஞ்சள் மூட்டைகளை வாங்கி இருப்பு வைப்பதாகவும் வணிகர்கள் கூறினர்.
பல ஆண்டுகளுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் மஞ்சள், தரமானதாக இருக்க, குளிர்பதன கிடங்குகளை அரசு அமைத்து தர வேண்டும் என மஞ்சள் வணிகர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்திற்கு இணையாக தரமான மஞ்சள் ஆண்டு முழுவதும் ஈரோடு சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
- ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள்
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.
அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். இங்கு அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பெருக்கு மற்றும் முக்கிய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட த்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக திருமண தம்பதிகள் புனித நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் ஆற்றில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பலர் புது தாலி மாற்றி கொண்டனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தீயணைப்புத்துறை சார்பில் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
இதையொட்டி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடையின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
இதே போல் ஆடிப்பெருக்கையொட்டி ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையல் போட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு படையலில் உணவு வைத்து அதில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் தின்பண்டங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் படையலின் பகுதியை முன்னோர்களை நினைத்து காகத்துக்கு வைத்தனர். மற்றொரு பகுதியை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டனர். முன்னதாக அவர்கள் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
- ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
- நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தகவல் தெரிவித்தார்
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய ரோடுகளில் ஈரோடு-சென்னிமலை ரோடு ஒன்று. ஈரோடு மாநகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரங்–கம்–பா–ளை–யம், சுற்–று–வட்டச்–சாலை, வெள்ளோடு, பெருந்துறை ரெயில் நிலையம் வழி–யாக இந்த ரோடு செல்கிறது.
இது எப்போதும் பரப ரப்பும், போக்–கு–வ–ரத்து நெரி சல் மிகுந்–தும் காணப்படும். இந்த ரோட்டில் ஈரோடு மாநகராட்சி பகு–தியிலேயே சாஸ்திரிநகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்–ளது. இந்த பாலத்–தின் இணைப்பு சாலை சரி–யாக இல்லை.
எனவே ஈரோட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்–லும் வாகன ஓட்–டி–கள் மிக–வும் சிர–மப்–ப–டு–கின்–ற–னர்.
குறிப்பாக பாலத்தை யொட்டியே தமிழ்–நாடு அரசு போக்குவ ரத்து க்கழக பணிமனை உள்–ளது. 3 பணி–மனைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவ தால் தினமும் பணிம னைக்கு வரும் அனைத்து பஸ்களும் இங்கு நிறுத்த ப்படுவதால் போக்குவர த்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த காரண ங்களால், சாஸ்–திரி நகர் ரெயில்வே மேம்பால த்தில் இருந்து ஈரோடு சாலையை இணை க்கும் வகை–யில் இணைப்பு பாலம் அமைக்க வேண்–டும் என்று பொதும க்களும், வாகன ஓட்–டி–களும் கோரி க்கை விடுத்து வந்தார்கள். இது–தொ–டர்–பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்–டர் ராஜகோ–பால் சுன்–கரா நெடுஞ்–சா–லைத்–துறை அதிகா–ரி–க–ளுக்கு உத்தரவி ட்டார்.
அதன்–பேரில் நெடுஞ்–சாலைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு கோட்ட ப்பொறியா–ளர் மாதேஸ்–வ–ரன் ஒரு விளக்க அறிக்–கையை மாவட்ட கலெக்–ட–ருக்–கும், சென்னை கிண்–டி–யில் உள்ள நெடுஞ்சா–லைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியா–ள–ருக்–கும் அனுப்பி உள்–ளார். அதில் கூறப்பட்டு இருப்–ப–தா–வது:- ஈரோடு மாவட்ட த்தின் முக்–கிய சாலையாக ஈரோடு-சென்னி–மலை ரோடு உள்ளது.
இங்கு ஒருங்கி ணைந்த சாலை உள்கட்–ட–மைப்பு மேம்பாட்டு திட்டத்–தின் மூலம் சாலை சந்–திப்பு மேம்–பாட்டுப ணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்–கப்–பட்டு உள்–ளது. இதற்–கான ஒப்–பந்–தம் முடிவு பெற்று பணிகள் தொடங்கி உள்–ளன. மேலும் சாலை சந்–திப்பு மேம்–பாட்டு பணி க்காக ரோடு அகலப்படுத்–த–வும், மழை –நீர் வடி–கால் அமைக்–க–வும் ஆக்கி–ர–மிப்–பு–கள் அகற்றப்பட்டு வரு–கின்–றன.
மேம்பாலத்தின் அணுகு சாலை–யில் வாக–னங்–கள் குழப்பமின்–றி–யும், பாதுகாப்பா–க–வும் செல்ல சாலை சந்திப்பு வடிவமைப்பு (ரவுண்டானா) நெடுஞ்–சா–லைத்–துறையின் சாலை பாதுகாப்பு அலகு அதி–கா–ரி–க–ளால் பரி–சீ–லனை செய்யப்பட்டு ஒப்–பு–தல் பெறப்பட்டு இருக்கிறது. இங்கு பரீட்–சார்த்த முறை யில் தற்காலிக தடுப்புகள் மூலம் வாக னங்கள் அனுமதிக்கப்படு–கின்–றன. இங்கு நிரந்தர கட்–ட–மைப்பு மேற்–கொள்–ளப்–படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பரீட்சார்த்த முறை–யில் தற்கா–லிக ரவு ண்டானா அமைக்–கப்–பட்ட பிறகும், இங்கு போக்கு வரத்து நெரிசல், விபத்–து–கள் ஏற்படுவதை தடுக்கவே ஈரோடு சாலை–யில் இருந்து மேம்–பாலத்–துக்கு இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொது–மக்–கள் மற்றும் வாகன ஓட்–டி–கள் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பி டத்தக்–கது.
- நகராட்சி நிர்வாகம் திறந்து கிடந்த கிணற்றில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்தது.
- இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தி லிருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது.
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி தினசரி மார்க்கெ ட், பஸ் நிலையம் செல்லு ம் சாலை யின் அருகில் நகராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம் சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவல கங்கள் இருப்பது குறிப்பிடத்த க்கது. இந்த வழியாக தினமும் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருக்கிறது. இந்த சாலை முற்றிலும் பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை.
இந்த சாலையை யொட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாது காப்பின்றி ஒரு கிணறு திறந்து கிடந்தது. இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தி லிருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. மற்றும் இந்த கிணற்றில் குப்பை கழிவுகள் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் முதி யோர்கள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது என மக்கள் புகார் கூறினர். எனவே போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமலும் மற்றும் சுகாதாரக் கேடு ஆகாமலும் தடுத்தும் மற்றும் விபத்துகள் நடக்கா மல் இருக்க பாதுகாப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து சில நாட்களுக்கு முன்பு மாலை மலர் நாளிதழில் செய்தி வெளிவந்தது. இதை த்தொடர்ந்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் திறந்து கிடந்த கிணற்றில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்தது. இதை தொடர்து அந்த கிணற்றின் மேல் பகுதியில் புதிய இரும்பு கேட்டுகள் அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கிணற்றை மூடினர். பொது மக்களின் கோரி க்கைகளை ஏற்று உடனடி யாக கேட்டுகள் அமைத்து கிணற்றை சரி செய்து கொடு த்து நகராட்சி ஆணையாளர் மற்றும் அதி காரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆடிப்பெருக்கையொட்டி நாளை பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்
- நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை யொட்டி 15 ஏக்கர் பரப்பள வில் பூங்கா உள்ளது. அணை மேற்பகுதியில் உள்ள நீர்த்தேக்க பகுதியை பொது மக்கள் பார்வையிட ஆண்டு தோறும் ஆடி 18 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்து ஆயிரக்க ணக்கானோர் பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட வருவது வழக்கம். பவானிசாகர் அணையை முழுவதுமாக நடந்தே பார்ப்பது ரம்மியமாக இருக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் பாது காப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) பவானிசாகர் அணை மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர். அதேசமயம் ஆடிப்பெருக்கு பண்டிகை நாளில் பவானி சாகர் பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இதுகுறித்து நீர்வள த்துறை அதிகாரிகள் கூறி யதாவது:- பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டி உள்ளது.
மேலும் அணை மேற்பகுதி யில் உள்ள தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே பாதுகாப்பு கருதி ஆடி 18 ஆம் தேதி (நாளை) அணை மேற்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அணை மேல்பகுதியில் உள்ள நீர் தேக்கப் பகுதியை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை அதே சமயம் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என்றனர். இதேபோல் நேற்று பவானிசாகர் அணை மேற்பகுதியில் காட்டு யானை ஒன்று வனப்பகு தியை விட்டு வெளியேறி அணை மேற்பகுதி வழியாக பூங்காவுக்குள் நுழைந்து வெளியே சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக அந்த யானை மீண்டும் நீர்த்தேக்க மேற்பகு தியில் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பவானி சாகர் அணை மேற்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அனுமதி க்கப்படும் என்று எதிர்பா ர்த்து காத்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு இந்த தடை அறிவிப்பு ஏமாற்ற த்தை ஏற்படுத்தியுள்ளது.
- கரண்ட் கம்பத்தில் மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
- அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இரண்டு பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்
பெருந்துறை,
பெருந்துறை, கோவை மெயின் ரோடு பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் ரோட்டோர கரண்ட் கம்பத்தில் மோதிய கார், சாக்கடை பள்ளத்துக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.திருப்பூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று அதிகாலை இரண்டு நபர்கள் காரில் வந்தனர். இந்த கார் பெருந்துறை, கோவை மெயின் ரோடு, கோட்டை முனியப்பன் கோவில் அருகே வந்த பொழுது ரோட்டின் குறுக்கே ஒரு நாய் வந்துள்ளது. அந்த நாயின் மீது மோதாமல் தவிர்க்க காரின் டிரைவர், காரை இடது புறமாக திருப்பிய போது திடீரென நிலை தடுமாறு ரோட்டோரத்தில் இருந்த கரண்ட் கம்பத்தில் மோதி அருகில் உள்ள சாக்கடை பள்ளத்துக்குள் இறங்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த இரண்டு பேரும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர் இந்த விபத்தில் கரண்ட் கம்பம் முழுவதுமாக முறிந்து போய், காரின் முன் பகுதியில் மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் காலை வேளையில் பெருந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
- இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.85 அடி யாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவா னிசாகர் அணை. அணை யின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை க்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் மழை பொழிவு குறைந்த தால் நீர்வரத்தும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 83.85 அடி யாக உள்ளது. இன்று கா லை அணைக்கு 2,871 கன அடி நீர்வரத்து வருகிறது. அணையில் இருந்து காலி ங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்ப ள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி யும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- அந்தியூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
- அந்தியூர் பகுதியில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 9.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் அந்தியூர்- அத்தாணி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.153 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் பணி மற்றும் ரூ.123 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்தியூர் வார சந்தை வளாகத்தில் ரூ.574.35 லட்சம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து அந்தியூர் காந்திஜி சாலை, தவிட்டுப்பாளையம் மயான த்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.140 லட்சம் மதிப்பீட்டில் தகன மேடை அமைக்க ப்பட்டு உள்ளதையும், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவு மையம் அமைக்க ப்பட்டுள்ளதையும், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.
தொடர்ந்து அந்தியூர் அரசு மருத்துவமனையினை நேரில் சென்று கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறி ந்தார். முன்னதாக கலெக்டர் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசிலதார் அலுவலகத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதி வேடுகளை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கணினி அறை மற்றும் பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சிவசங்கர், ஆனந்தன், உதவிப்பொறியாளர் சிவபிரசாத், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர் திருவிழா நடக்கிறது
- கூடுதுறையில் இருந்து பக்தர்கள்தீர்த்த குடம் எடுத்து வந்தனர்
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி பெரும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு க்கான தேர்த்திருழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 26-ந் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் வன பூஜை விழா நடந்தது. இதையொட்டி இன்று காலை புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து 3 தேர்களில் காமாட்சி அம்மன், பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய 3 சாமிகளும் தேர்களில் வனக் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை அதிகாலை வன கோவிலிலிருந்து புது ப்பாளையம் கோவிலுக்கு வந்து சேரும். முதல் வன பூஜைக்கு தேர்களை எடுத்துச் செல்லும்போது பெண்கள் தேர்களின் முன் விழுந்து தங்களது வேண்டுதலை கூறி வணங்கி செல்வார்கள். அவ்வாறு வேண்டும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுவதாக பெண்கள் பக்தர்கள் கூறுகின்றனர்.
முதல் வன பூஜைக்கு முன்தினம் குருநாதர் கோவி லுக்கு கடைசி தீர்த்தமாகவும் பெரிய கூடம் தீர்த்தமாகவும் சொல்லப்படும் தீர்த்த க்குடம் பவானி கூடுதுறை யில் இருந்து எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புதுப்பாளையம் வன கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வரும் 9-ந் தேதி தேர்த்திருவிழா துவங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மோக னபிரியா பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.எஸ் சாந்தப்பன், பரம்பரை அரங்காவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- சாராயம் காய்ச்சிய முதியவர் கைது செய்யபட்டார்
- 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யபட்டது
ஈரோடு,
ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோடு ராக்கசாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த தென்முக வெள்ளோடு பகுதியை சேர்ந்த கண்ணையா என்ற பெரியசாமி (வயது 60) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பிளாஸ்டிக் பேரலில் உள்ள 20 லிட்டர் சாராய ஊறல், ஏற்கனவே காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 1 லிட்டர் சாராயம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






