சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார். அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உருமையன் வீதியை சேர்ந்தவர் சாருஹாசினி (20). இவர் பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது தந்தை சின்னசாமி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார். அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் அமுதவதி காலை வேலைக்கு சென்று இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் புறமாக தாழிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து டிவியின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சாருஹாசினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலை பார்த்து அவரது தாய் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com