search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • புதுமண தம்பதிகள் ஏராளமானோர் பண்ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆடிப்பெரு க்கையொட்டி இன்று அதி காலை முதலே கோவி ல்களில் பக்தர்கள், பொது மக்கள் வழிபட குவிந்த வண்ணம் இருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை முதலே நடை திறக்க ப்பட்டு பண்ணாரி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்ய ப்பட்டது. புதுமண தம்பதி கள் ஏராளமானோர் பண் ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதைப்போல் கோபி செட்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று அம்மனை வழிபட்டனர். இதே போல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், முடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோயில்களில் ஆடிப்பெ ருக்கை ஒட்டி சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைப்போல் அந்தியூ ரில் பிரசித்தி பெற்ற பத்திர காளி அம்மன் கோவிலில் காலை முதலே நடை திறக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்தியூர் பேட்டை பெருமாள் செல் ஈஸ்வரர் கோவில், வரத ராஜ பெருமாள் கோவி லிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஈரோடு மாநகரில் மிகவும் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசை யில் நின்று பெரிய மாரிய ம்மன் தரிசித்து சென்றனர்.

    இதைப்போல் சின்ன மாரியம்மன், காரை வாய் க்கால் மாரியம்மன், கொங் காலம்மன் வீரப்பன்சத்தி ரம் மாரியம்மன் போன்ற பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைக நடைபெ ற்றது. ஆடிப்பெருக்கையொ ட்டி மாவட்டம் முழுவதும் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    Next Story
    ×