search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்தனர்
    X

    பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்தனர்

    • ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் குவிந்த வண்ணம் உள்ளனர்
    • கொடிவேரியில் 13,500 பேர் குளித்து மகிழ்ந்தனர்

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வ தற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட ஏராள மான மக்கள் வந்து தண்ணீரில் குளித்து மகிழ் வார்கள். இதனால் தடுப்பணையில் எப்போது கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் ஆடி பெருக்கை நேற்று வழக்க த்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். காலை முதலே ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் கொடி வேரி பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் தலைகளாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இந்த நிலையில் ஆடி பெருக்கு விழாவையொட்டி நேற்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரத்து 500 பேர் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து விட்டு சென்றனர். இதன் மூலம் ரூ.67 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்த னர். பவானிசாகர் அணைக்கு காலை நேரத்தில் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அதி கரித்து கொண்டே இருந்தது.

    ஆடி பெருக்கையொட்டி அணையின் மேல் பகுதியில் பொதுமக்கள் அனுமதி க்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பவானிசாகருக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதை தொடர்ந்து அவர்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுடன் வந்து இருந்த மக்கள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பவானிசாகர் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து பொது அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.இதனால் நேற்று ஒரே நாளில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுமார் 18 ஆயிரத்து 394 பேர் கண்டு களித்தனர். இதன் மூலம் ரூ. 91 ஆயிரத்து 470 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×