என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர், கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர், கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- கடும் சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க அனுமதி க்கப்பட்ட னர்.
கோபி,
ஆடிப்பெருக்கை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆடிப்பெருக்கு வெட்டி பவானி சங்கமே ஸ்வரர், ஈரோடு கருங்கல்பா ளையம் காவிரி கரை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாரி முதலை ஏராளமான மக்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்ப ணம் கொடுத்தனர். மேலும் புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விடு முறையை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணை பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் குவிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பொது மக்கள் தங்களது குடும்பத்து டன் பூங்காவுக்கு படை யெடுக்க தொடங்கினர்.பூங்காவில் எங்கு பார்த்தா லும் மக்கள் தலையாகவே காட்சி யளித்தது. பூங்காவை ஒட்டி உள்ள மீன் கடைகளில் இன்று வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.
ஏராளமான புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் பூங்காவில் குவிந்து பொழுதை உற்சாகமாக கழித்தனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆடிப்பெருக்கை யொட்டி பவானிசாகர் அணை நீர்த்தேக்க மேற்பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பவானிசாகரின் மேற்பகுதியில் பொதுமக்கள் சென்று பவானிசாகர் அணையின் அழகை ரசித்து வந்தனர். ஆனால் கொரோ னா தாக்கம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நீர்த்தேக்க மேற்பகுதியில் பொதுமக்கள் அனு மதிக்கப்பட வில்லை.
ஆனால் இந்த முறை அணையின் நீர் தைக்க மேற்பகுதியை பார்க்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டும் நீர் தைக்க மேற்பகுதியில் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என நீர்வளத் துறையினர் தெரிவித்து விட்டனர். பாது காப்பு நடவடிக்கை காரண மாக தடை விதிக்கப்ப ட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்து இருந்தனர்.
தற்போது பவானிசாகர் அணையில் 84 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் நீர் தேக்கப் பகுதியில் மரங்களில் தேனீக்கள் கூடுகள் பெரிய அளவில் கட்டியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் பவானிசாகர் அணை பூங்காவில் சென்ற பொழுது கழித்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கோபியை அடுத்த கொடிவேரி அணையில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். ஈரோடு மட்டுமன்றி சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் இருந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நகராட்சி சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
கடும் சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க அனுமதி க்கப்பட்ட னர். காலை 8 மணிக்கு பிறகு கூட்டம் அதிக அளவில் வர தொடங்கியது. அணைப்பகுதியில் உள்ளே பூங்காவிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குழந்தை கள் பெரியவர்கள் உற்சாக மாக பொழுதை கழித்தனர். கொடிவேரி அணை பகுதியில் வெளியே சுடச்சுட பொரித்த மீன் வியாபாரம் மும்மரமாக நடைபெற்றது. தற்போது கொடிவேரியில் தண்ணீர் அதிக அளவில் விழுவதால் பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பூங்காக்களில் மக்கள் பொழுதை கழித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்