என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.68 அடி யாக உள்ளது.
- அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகி றது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.68 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1086 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 300 கன அடியாக அதிகரி க்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு நேற்று வரை 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 500 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.
- பொங்கல் திருவிழாயொட்டி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
- தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி ஈரோடு ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆடி மாதம் பொங்கல் திருவிழாயொட்டி கடந்த 3-ந் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் சங்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் வைத்தலும், 8 மணிக்கு மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருகிற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
12 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாலிச் சரடு வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.
விழாவில் ஈரோடு, பவானி, அந்தியூர், கணக்கம்பாளையம், கோபி, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு காமாட்சி அம்மனின் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்.
- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
- மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.
ஈரோடு:
பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போன்ற தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு பெருந்துறை சாலை, பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேல்நிலை 2-ம் ஆண்டில் 139 மாணவ, மாணவிகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 87 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வருகின்றது.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் இப்பள்ளியின் வளாகத்தை மேற்பார்வையிட்டதோடு பள்ளி நூலகம், ஆசிரியர் களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, தொழில் நுட்ப வகுப்பறை, மாணவர்களின் ஒழுக்கம், சுற்றுப்புறத்தூய்மை, மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடு, மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் உணவகத்தினையும் பார்வையிட்டார்.
மேலும் முந்தைய மாணவர்கள் பங்கு பெற்ற போட்டித்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் ஆகியவை குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணாக்களின் பல்வேறு விதமான வினாக்களுக்கு பதில் அளித்ததுடன், "தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது" என்றும், ஐஏஎஸ் ஆவது எப்படி? என்பது பற்றியும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவர்களிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். பல புத்தகங்களை படிக்க வேண்டும். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, அதை தகர்த்து விட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
மாணவர்களின் பல்வேறு திறமைகளைப் பாராட்டி அவற்றை மென்மேலும் வளர்த்து அடுத்த வருடம் அனைவரும் சாதனையாளர்களாக மாறி வரும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் மாணவ, மாணவி கள் வெளிப்படுத்திய தனித் திறன்களான கவிதை, பாடல், பேச்சு, சித்திரத் தையல் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து அவர்களை மனதார பாராட்டியதுடன் தன் கையொப்பமிட்ட புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைராஜன், உதவி திட்ட அலுலவர் ராதாகிருஷ்ணன், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், ஒருங்கிணைப்பாளர் மாதுனியாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும்.
- ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்கவும் மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி யூனியன் அம்மாபாளையம் பஞ்சாயத்தில் அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், கணேசம் புதூர் ஆகிய 3 கிராமங்களில் 1600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமமாக அம்மாபாளையம் அமைந்துள்ளது.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள். பவானி ஆற்றின் மறுகரையாக இருக்கும் கைகாட்டி பிரிவுக்கு பரிசல் மூலம் மட்டுமே செல்ல முடியும். அம்மாபாளையம் கிராமம் ஆற்றின் மறுபக்க கரையில் உள்ளது. அம்மாபாளையத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி தொடரவும், தொழில் மற்றும் தேவைக்காக வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து செல்கிறார்கள். இதற்காக ஆற்றங்கரையில் பரிசல் இயக்கப்பட்டு நபருக்கு ரூ.5 பயண கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசலில் தான் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரி சமயங்களில் பரிசல் செல்லும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.
மேலும் இப்பகுதி மக்களுக்கு அவசர கால சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசல் பயணத்தை நம்பி உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கனவாகவே இருந்து வருகிறது.
வழக்கம்போல் தொடர்ந்து பொதுமக்கள் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
அம்மாபாளையம் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று வருகிறோம்.
இதற்காக பரிசல் பயணத்தையே நாங்கள் நம்பி உள்ளோம். நாங்கள் 50 ஆண்டுகளாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியுள்ளோம். அரசியல் கட்சியினர் இங்கு தேர்தல் சமயத்தில் மட்டுமே ஓட்டு கேட்க வருகின்றனர்.
வாகனங்களில் செல்ல நாங்கள் பாலம் கேட்கவில்லை. ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்க மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் மனு கொடுத்தும் பாலம் இன்னும் வரவில்லை.
எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாததால் இதற்கு முன்பு நடந்த 2 முறை நடந்த தேர்தலை புறக்கணித்து உள்ளோம். தற்போது தி.மு.க. அரசு பதவி ஏற்றுள்ளது. எங்களது 50 ஆண்டு கால கனவை அரசு நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார்.
- அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உருமையன் வீதியை சேர்ந்தவர் சாருஹாசினி (20). இவர் பெருந்துறையில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது தந்தை சின்னசாமி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் அமுதவதி பராமரிப்பில் சாருஹாசினி வளர்ந்து வந்தார். அமுதவதி அவிநாசியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் அமுதவதி காலை வேலைக்கு சென்று இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் புறமாக தாழிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து டிவியின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அமுதவதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சாருஹாசினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலை பார்த்து அவரது தாய் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து ஈரோடு வீரப்பன்ச த்திரம் போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு அசோகபுரம் 4-வது வீதியைச் சேர்ந்தவர் முருந்தன் (வயது 46). தொழிலாளியான இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் உமாராணி என்பவ ருடன் திருமணமாகி 2 வருட ங்களில் உமாராணி இறந்து விட்டார்.இதையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சிந்துபைரவி என்ற பெண்ணு டன் திரும ணமாகியது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக சிந்துபைரவி கணவரை விட்டுப் பிரிந்து சென்று குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையை பிரிந்ததிலிருந்து முகுந்தன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து முகுந்தன் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்து வர்கள் வரும் வழியிலேயே முகுந்தன் இ றந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஈரோடு வீரப்பன்ச த்திரம் போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோட்டில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது
- பயணிகள் அதிர்ச்சி
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பஸ்க ளுக்கு நிகராக தனியார் பஸ்களும் பல்வேறு வழி த்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதிக்கு ள்ளேயும், சேலம், கோவை, திருப்பூர், கோபி, சத்தியம ங்கலம், பழனி, அரச்சலூர் போன்ற பகுதிகளில் தனி யார் பேருந்துகள் இயக்கப்ப ட்டு வருகின்றன.அரசு பஸ்சில் நிர்ணயி க்கப்பட்ட கட்டணம்தான் தனியார் பஸ்களில் இது வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீ ரென தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்ப ட்டுள்ளது.
ஈரோட்டில் இரு ந்து பெருந்துறைக்கு செல் லும் தனியார் பஸ்சில் இது வரை 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற் போது 15 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. இது குறித்து விவரம் கேட்டால் முறை யான பதில் வரவில்லை. இதேபோல் பெருந்துறை யில் இருந்தும் ஈரோடுக்கு வரும் தனியார் பஸ்சில் ரூ.2 கட்ட ணம் உயர்த்தப்ப ட்டுள்ளது. இது குறித்து தனியார் பஸ் கண்டக்டரிடம் பயணி கள் கேட்டபோது எங்களு க்கு ஒன்றும் தெரியாது. கூட்டச் சொன்னதால் கூட்டி விட்டோம் என்று மட்டும் கூறுகின்றனர். இது மட்டுமின்றி வெளியூர் செல்லும் தனியார் பஸ்க ளிலும் கட்டணம் கூடியு ள்ள தாக தகவல் வெளி யாகி உள்ளது. இதனால் பயணி கள் கடும் அதிர்ச்சி அடை ந்துள்ள னர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யபட்டனர்
- அவ ர்களிடம் இரு ந்து 52 சீட்டு கள், பணம் ரூ.590 ஆகியவ ற்றையும் பறி முதல் செய்த னர்.
ஈரோடு;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை ரோடு, காந்தி நகர், பொன்கா ளியம்மன் கோயில் பகுதி யில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடு பட்டு வருவதாக பெருந்து றை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அத ன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்கா ணித்ததில் அங்கு ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாரதி (28), பிரபாகர் (26), வேல்முருகன் (31), சுப்ரமணி (52), செந்தில்குமார் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவ ர்களிடம் இரு ந்து 52 சீட்டு கள், பணம் ரூ.590 ஆகியவ ற்றையும் பறி முதல் செய்தனர்.
- நசியனூர் அருகே சென்ட்ரிங் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கபட்டது
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், நசிய னூர், கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32). இவரது மனைவி நித்யா (22). இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் செண்டரிங் வேலை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான வெங்கடேஷ் வேலை செய்து கிடைக்கும் பண த்தில் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக நித்யா கணவரைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வெங்கடேஷின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி யுள்ளது. அருகில் இருந்த வர்கள் இது குறித்து நித்யாவின் தாயாருக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில் அங்கு வந்த நித்யாவும், வெங்கடேஷின் தாயாரும் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பெட்ரூமில் உடல் அழுகிய நிலையில் வெங்கடேஷ் சடலமாக கிடந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலியானார்
- தாய்- மற்றொரு மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது
ஈரோடு,
ஈரோடு அருகே ரகுபதி நாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு ஜீவா னந்தம் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழி லாளி. இவருடைய மனைவி காவிரி. இவர்களுக்கு விஷ்ணு (9), விஸ்வா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.இவர்கள் காவிரியின் தந்தை சுப்பிரமணியின் வீட்டில் வசித்து வருகி ன்றனர். விஷ்ணுவுக்கு பிறந்ததில் இருந்தே பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தான். விஸ்வா 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 30-ந் தேதி இரவு சக்திவேல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாப்பாட்டுக்கு பொறியல் இல்லையென்று காவிரி யிடம் சக்திவேல் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவிரி கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை யில் சக்திவேல் வேலைக்கு சென்ற பிறகு காவிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பி னார்.இந்தநிலையில் காவிரி திடீரென வீட்டுக்கு வெளியில் நின்று வாந்தி எடுத்தார். அப்போது அங்கு வந்த காவிரியின் சகோதரன் மணிகண்டன், உடலுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு உள்ளார். அதற்கு காவிரி, 3 பாட்டிலில் மாங்காய் ஜூஸ் வாங்கி வந்து விஷத்தை கலந்ததா கவும், அதில் ஒரு பாட்டில் ஜூசை குடித்து விட்டதாக வும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் உடனடியாக வீட்டு க்குள் சென்று பார்த்தார்.
அப்போது மீதமுள்ள 2 பாட்டில்களில் இருந்த ஜூசையும் விஷ்ணுவும், விஸ்வாவும் குடித்து கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், விரைந்து சென்று பாட்டில்க ளை பிடிங்கி வெளியில் வீசினார். இதைத்தொடர்ந்து காவிரி மற்றும் 2 குழந்தை களையும் மணிகண்டன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவருக்கு டாக்ட ர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாப மாக உயிரிழந்தான். காவிரிக்கும், விஸ்வாவுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம் வெளியிடபட்டுள்ளது
- வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.88 அடியாகவும் உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 479 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 29.02 அடியாகவும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 20.34 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.88 அடியாகவும் உள்ளது.
- ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- பக்தர்கள் குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவினர்
ஈரோடு,
ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.இதையொட்டி அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர். கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்ட த்து காளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.
மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரிய ம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனு க்கு சிறப்பு பூஜை நடந்தது.பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவ ருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.
அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்கள் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ர காளியம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, முக்கிய விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அந்தியூருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் வழிபட்டு சென்றால் அனைத்து செயல்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இதில் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு காய், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவி லுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாத மாக வழங்க ப்பட்டது. சென்னிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடு நடை பெற்றது. சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகைத்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஈங்கூர் தம்பிரா ட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.மேற்கு புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் சென்னிமலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மாகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகிரி பொன்காளி யம்மன், காமாட்சி அம்மன், எல்லை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பக்தர்களு க்கு கூழ் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் கூழ் கொண்டு வந்து வழிபாடு நடத்தினர். பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடக்கிறது. இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டது.
மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணிக்கூண்டு கொங்கால ம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்து பண்ணாரி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி 18 மற்றும் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு செலுத்தி விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடு, வளையல்களை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவியும், சூலாயுதத்தில் எலுமிச்சை கணிகளை குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.மேலும் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






