search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "record over"

    • ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
    • வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் தாக்கம் மாலை 5 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    வீட்டில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், மோர், கரும்பு பால் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதேப்போல் வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு வியாபாரமும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஈ.வி.என்.ரோடு,மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு மதிய நேரங்களில் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்கனவே மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் சுமாராக இருந்த வெயிலின் தாக்கம் கடந்த 5 நாட்களாக மீண்டும் வாட்டி வதைத்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

    ×