என் மலர்
ஈரோடு
- விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
- கண்ணன் என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மொடக்குறிச்சி:
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அடுத்த சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த பூசாரி கருப்பு மகன் சிவாஜி. விவசாயி. இவருக்கு உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார்.
சிவாஜியிடம் பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்தவரிடம் ரூ.35 லட்சம் பணம் கொடுத்தால் ரூ.50 லட்சம் 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கு வதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்துடன் உறவி னர்கள் செந்தில், மாதேஷ், குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார்.
இதையடுத்து ராஜ்குமார் 2 பேருடன் சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் பெரு ந்துறை நோக்கி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே மற்றொரு காரில் இருந்த 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து அதிகாரிகள் என கூறி ரூ.35 லட்சத்துடன் 7 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பி சென்றனர்.
இது குறித்து மொட க்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து கரூர் மாவட்டம் மலைக்கோவி லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீஸ் போல் நடித்த நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் புதுப்பாளையம் மணமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த கரூர் மாவட்டம் சக்தி நகர் பகுதி யை சேர்ந்த கண்ணன் (52) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் கண்ணனிடம் இருந்த நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரை போலீ சார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து தலைமறைவான மற்ற வர்களை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.
- ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை கொள்ளாநல்லி, ஆட்டுக்காரன்புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் காளிங்கரான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 60). விவசாயி. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்க ளுக்கு செல்வகுமார், தர்ம லிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமார் கோவையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார், தர்ம லிங்கம் டிரைவராக உள்ளார். இவர்கள் அனை வரும் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி வரு கிறார்கள்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று செல்வகுமார் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதை யடுத்து வீட்டில் இரவு சந்திரசேகரன், குழந்தையம்மாள் தர்மலிங்கம் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது வீட்டின் கூரையில் இருந்து புகை வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் வீடு எரிந்து விட்டது. இதில் வீட்டில் வைத்து இருந்த பள்ளி சான்றிதழ்கள், மார்க் சீட், ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கிராம நிர்வாக அலு வலர் தமிழரசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர்.
இதை தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
- கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஈரோடு:
ஈரோடு அவல்பூந்துறை, கண்டிக்காட்டு வலசு இந்திரா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
வெள்ளிங்கிரி சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வைத்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து சிவரஞ்சனி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி அவ்வப்போது மனைவி பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்று வருவார்.
வெள்ளியங்கிரி அவ்வப்போது யாரிடம் சொல்லாமல் எங்கேயாவது கோவிலுக்கு சென்று விடுவார். அவர் கோவி லுக்கு செல்லும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று குடிபோதையில் மாமியார் வீட்டுக்கு வந்த வெள்ளியங்கிரி சாப்பிட்டு உள்ளார். அப்போது சாப்பாடு சரியில்லை என்று கூறி மனைவியை சத்தம் போட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.
மாலை அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி சாயுபுதோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அதனை அவரது மாமியாரும் பார்த்து உள்ளார்.
அதன் பின்னர் வெள்ளியங்கிரி எங்கையோ சென்று விட்டார். வழக்கம்போல் சிவரஞ்சனி கணவருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை கோவிலுக்கு சென்று இருப்பார் என்று கருதிய சிவரஞ்சனி பின்னர் கணவருக்கு போன் செய்யவில்லை.
இந்நிலையில் சிங்கம்பேட்டை-எரன்கடு ஐயம் தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் வெள்ளிங்கிரி உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசார ணையில் வெள்ளிங்கிரி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
- அறநிலையத்துறையினர் கோவிலை எடுக்க கூடாது வேண்டும் என வலியுறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு திருநகர் காலனி கே.என்.கே. சாலையில் பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் நிர்வாகிகளாக இருந்து விழாக்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த கோவிலை கடந்த சில நாட்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட சமூகத்தினரும், பொதுமக்களும் இன்று காலை கே.என்.கே. சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவில் எங்களுக்கு பாத்தியப்பட்டது. அறநிலையத்துறையினர் கோவிலை எடுக்க கூடாது வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது போலீசார் உங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளியுங்கள். மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர். இதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்ட த்தினால் கே.என்.கே. சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், மண்கரடு, செல்வநகரை சேர்ந்தவர் மல்லீஸ்வரன். இவர் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் மைனாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இதற்காக மல்லீஸ்வரன் தாளவாடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று தாளவாடி வட்டத்தில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாம் நடைபெறு வதையொட்டி முகாம் பொறுப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்று தெரிந்து கொள்வதற்காக தாளவாடி வருவாய் அலுவலர் மதிவாணன் கிராம நிர்வாக அலுவலர் மல்லீஸ்வரனை போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
ஆனால் மல்லீஸ்வரன் போனை எடுக்கவில்லை. உடனடியாக மதிவாணன் இது குறித்து தாளவாடி தாசில்தார் ரவிசங்கரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மதிவாணன், துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மல்லீஸ்வரன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றனர். வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் பதில் ஏதும் வராததால் இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மல்லீஸ்வரன் ஒரு அறையில் வாந்தி எடுத்தவாறு மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மல்லீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் கிராம நிர்வாக அலுவலர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வசூலாகும் தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்றும் அம்மா உணவகத்தில் வசூலான பணத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்த சென்றுள்ளனர். அப்போது பணத்தை என்னும் மெஷினில் பரிசோதிக்கும் போது 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தங்கள் கை காசுகளை போட்டு சமாளித்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ள நோட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.
அதிசயமும் அதே சமயம் தங்களிடம் சிக்கிய 10 ரூபாய் கள்ள நோட்டை வாடிக்கையாளர்கள் கண்ணும் படும்படி இதன் பெயர் கள்ள நோட்டு என நூல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, தினமும் அம்மா உணவகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கள்ள நோட்டுப் புழக்கம் இருந்து வருகிறது. பொதுமக்கள் யார் மீதும் சந்தேகப்பட முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பணம் எண்ணும் எந்திரம் இருந்தால் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றனர்.
- காய்கறிகள் விலையும் குறைய தொடங்கி வருகிறது.
- கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் இன்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தாளவாடி, ஓசூர், ஒட்ட ன்சத்திரம், திண்டுக்கல், பெங்களூர், கர்நாடகா, தாராபுரம் போன்ற பகுதி களிலிருந்து தினமும் 100 டன்னுக்கு மேற்பட்ட காய்க றிகள் விற்பனைக்கு கொண் டுவரப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கார ணங்களால் காய்கறிகள் வரத்து குறைய தொடங்கி யது. இதன் எதிரொலியாக தக்காளி, சின்ன வெங்கா யம், பீன்ஸ், இஞ்சி, போன்ற வைகளின் விலை விண் ணை தொடும் அளவிற்கு உயர்ந்தது. தக்காளி சில்ல ரை விற்பனையில் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை யானது.
இதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மீண்டும் காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதன் எதிரொலியாக காய்கறிகள் விலையும் குறைய தொடங்கி வருகிறது. கடத்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை இன்று கிலோ ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வருகிறது.
இதைப்போல் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் ரூ.80 இருந்தது. இன்று மேலும் குறைந்து ரூ.65-க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 120 டன் காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்ப ட்டிருந்தது. இதனால் பல காய்கறிகளின் விலை கட ந்த வாரத்தை பட இந்த வாரம் குறைந்து உள்ளது.
கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்ற கத்திரி க்காய் இன்று ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய ப்படுகிறது. இதேபோல் 40 ரூபாய்க்கு விற்ற வெண்டை க்காய் இன்று ரூ.30-க்கும், 40 ரூபாய்க்கு விற்ற முள்ளங்கி இன்று ரூ.20-க்கு விற்பனை செய்ய ப்படுகிறது.
இன்று வ.உ.சி. மார்க்கெ ட்டில் விற்கப்பட்ட காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:- பாவக்காய்-50, பீர்க்கங்காய்-50, புடலங்காய்-40, முருங்கை க்காய்-30, சுரைக்காய்-20,
கருப்பு அவரை-100, பட்ட வரை-50, கேரட்-80, பீட்ரூ ட்-80, முட்டைகோஸ்-25, பீன்ஸ்-100, காலிபி ளவர்-40, உருளைக்கிழங்கு-40, பெரிய வெங்காயம்-25, பச்சை மிளகாய்-50, கொ டைமிளகாய்-90, பழைய இஞ்சி-250, புதிய இஞ்சி-150.
- மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.
- வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தண்ணீர்பந்தல்பாளையம் பூலேரிகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (29). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு ராசிகா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மாரியப்பன் குடும்ப செலவுக்காக அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையில் மாரியப்பனுக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன் மாரியப்பன் அவரது குடும்பத்துடன் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் மாரியப்பன் கேபிள் ஓயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனைக்கு வருகிறது.
- 25 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும்.
ஈரோடு:
சுதந்திரத்தின் அமுத பெருவிழாவை அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களிலும் தேசிய கொடி ஓரிரு நாளில் விற்பனைக்கு வருகிறது. 25 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும். இதற்கு ஜி.எஸ்.டி. இல்லை.
தவிர https://www.epostoffice.gov.in என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி தபால்காரர் மூலம் தங்கள் வீடுகளுக்கே பட்டுவாடா செய்ய முன்பதிவு செய்யலாம்.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக தேசிய கொடியை வாங்க விரும்பினால் ஈரோடு, கோபி, பவானி தலைமை அஞ்சலகங்களில் பெறலாம்.
இத்தகவலை ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
- இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம்.
ஈரோடு:
ஈரோட்டில் நேற்று தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தவில்லை. சில பஸ்களில் சில்லறை இல்லை என்பதால் ரூ.1, ரூ.2 தராமல் இருந்திருப்பார்கள். நாங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.
இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். அரசு அறிவித்தால் மட்டுமே உயர்த்தலாம். தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5 சில்லரை தட்டுப்பாடாக உள்ளது. சில்லரையை நாங்கள் கமிஷன் கொடுத்து வாங்குகிறோம்.
டீசல் ஒரு லிட்டர் ரூ.65 இருந்தபோது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும் இதர செலவுகள் அதிகரித்து ள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றனர். தங்களது கை காசுகளை போட்டு பஸ்களை இயக்கி வருகின்றனர் என்றனர்.
தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு குறித்து கேட்டபோது ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து அரசு உத்தரவு இல்லாமல் பஸ் கட்டணம் நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். இன்று முதல் பழைய கட்டணம் வசூலிப்பதாக எங்களிடம் கூறியுள்ளனர்.
இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறிய ப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.68 அடி யாக உள்ளது.
- அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகி றது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.68 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1086 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 300 கன அடியாக அதிகரி க்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு நேற்று வரை 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 500 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.






