என் மலர்
ஈரோடு
- வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார்.
- விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முருகேசனை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.
வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அந்த பெண் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கிராம நிர்வாக அலுவலரை முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
- விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழிலாளி.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.
கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
- சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊரா ட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட் டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொண்றது.
அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. அதைத்தொ டர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறையினர் வைந்திருந்த கூண்டில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் பிடிபட்ட சிறுத்தை 4 வயதான பெண் சிறுத்தை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
- துரைசாமியும், சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால் துரைசாமியும், சுப்புலட்சுமி ஈரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துரைசாமி நேற்று ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது அலுவலகத்திற்கு வழக்கம்போல் சென்று விட்டார். வீட்டில் இருந்த சுப்புலட்சுமி ஈரோடு நாடார்மேட்டில் இவர்களுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் கட்டிட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து துரைசாமியும், சுப்புலட்சுமியும் மதியம் சாப்பாட்டிற்காக சுமார் மதியம் 2.30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். எப்போதும் போல வீட்டின் பூட்டினை திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டிற்குள் உள் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டும் அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த 150 பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து துரைசாமி வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது சமையல் அறையின் பின்புறம் உள்ள கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து 150 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றதை உறுதி செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் துரைசாமியின் வீட்டிற்கு வந்தனர். மேலும் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ராஜபிரபு, மோகனசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய் வீரா சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் சுவர், கதவு, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
துரைசாமியின் வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேண்ட், தலையில் தொப்பி, முக கவசம், கையுறை (கிளவுஸ்) அணிந்த மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்கம் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதிப்பதும், பின்னர் அந்த நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைவதும், சில நிமிடம் கழித்து ஒரு சிறிய பேக்கில் நகைகளை கொள்ளையடித்து மீண்டும் அதே வழியாக தப்பி சென்றது பதிவானது.
அந்த நபர் காலில் 3 கம்பிகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கொள்ளையனை பிடிக்கும் வகையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, சோமசுந்தரம், சண்முகம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார்.
- நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் மிக கொடூரமான சம்பவம். கலவரத்தின் மூலம் 2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலமாக மோடியை அவைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அவரை பாராளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் 3-வது முறையாக வெற்றி பெறவும் முயற்சி செய்கிறார்கள். குஜராத்தில் கற்ற பாடத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்குமான வளர்ச்சிக்குரிய நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவான அளவு பேசக்கூடிய சமஸ்கிருதத்திற்கு மிக அதிகபட்ச நிதியை ஒதுக்குகிறார்கள். தமிழ் மொழிக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தி மொழியை காலப்போக்கில் அனைவரும் ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வலுக்கட்டாயமான முறையில் திணிக்க முயற்சி செய்கிறார். ஒரு பக்கம் கலவரத்தின் மூலமாகவும், மத மோதல்கள் மூலமாகவும் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர்.
இந்தியை திணித்து மொழியின் மூலமாகவும் மொழி மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து விட்டு ஒரு சர்வதிகார பாசிச பாதையில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டு காலத்திற்கு தேர்தலுக்கு வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்னும் அவருடைய பதவி நீக்கத்தை விலக்க மறுக்கிறது.
அமலாக்கத்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய அரசுகளையும், கட்சிகளையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலமாக அடி பணி வைக்கக்கூடிய அப்பட்டமான ஜனநாயக விரோத செயலில் மத்திய அரசு ஈடுபடுத்தி வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தானது.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு நாடாக இருக்காது. சர்வாதிகாரி கையில் ஆட்சி சென்று விடும். அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக 26 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளது கர்நாடகத்தில் தோல்வி அடைய வைத்தது போல் நாடும் முழுவதும் மோடியை பா.ஜ.க.வை தோல்வியடைய வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.
அண்ணாமலை நல்ல விளம்பர பிரியர், ஆனால் பாதயாத்திரையை அவர் மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்ட மணிப்பூரில் அவர் நடைபயணம் நடத்தியிருந்தால் நல்லது. ஆனால் இங்கு நடை பயணம் என்ற பெயரால் வாகன பயணம் செய்து நாடகம் நடத்தி வருகிறார். மக்கள் பெரும் திரளாக வந்து கூடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் கூடவில்லை. இது அப்பட்டமான நாடகம்.
தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர இது போன்று முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஊழலையும், தி.மு.க. ஊழலையும் பேசுவேன் என்றார், ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றார், ஆனால் ஜெயலலிதாவை பற்றி பெரிய தலைவர் என்கிறார், தற்போது அதை பற்றி பேச மறுக்கிறார், பாதயாத்திரை துவக்க விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை, அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, மோடி அமித்ஷாவுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் பி.ஜே.பி. தலைமையில் இருக்கக்கூடிய அணி ஒன்று சேரக்கூடிய முடியாத ஒரு அணியாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனை, இந்தி திணைப்பு முயற்சி இவைகளை கண்டித்து வருகிற செப்டம்பர் 12 13, 14 ஆகிய மூன்று நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தொடர் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
- வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் தாக்கம் மாலை 5 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
வீட்டில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், மோர், கரும்பு பால் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதேப்போல் வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு வியாபாரமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஈ.வி.என்.ரோடு,மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு மதிய நேரங்களில் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் என்று வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏற்கனவே மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் சுமாராக இருந்த வெயிலின் தாக்கம் கடந்த 5 நாட்களாக மீண்டும் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
- அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.61 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 408 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் கீர்த்தனாவை (23) கடந்த ஜூன் மாதம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தானர்.
இந்நிலையில் கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருவரும் தலை ஆடி கொண்டாடுவதற்காக கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு கீர்த்தனா மற்றும் கார்த்திக்கை கோபாலகிருஷ்ணன் சரிவர கவனிக்காததால் கோபமடைந்த கார்த்திக் மற்றும் கீர்த்தனா சத்தியமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார்.
- பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
பவானி:
நாமக்கல் மாவட்டம் வளையக்காரன் பாளையம் தட்டான் குட்டை பகுதியில் வசிப்பவர் பெரியசாமி (வயது 40). கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் லேத்து வேலை மற்றும் கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பெரிய சாமி மற்றும் அவரின் சகோதரி தனலட்சுமி ஆகிய இருவரும் வடிவேல் என்ற வெள்ளையன் என்பவரு டன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
செய்த வேலைக்கு பெரிய சாமி பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் நீ மீண்டும் என்னிடம் வேலைக்கு வந்தால் தான் பணம் கொடுக்க முடியும் என கூறினார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இருவரும் அருகில் இருந்த கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மீண்டும் பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வெள்ளையன் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெரி யசாமியை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்து றை யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்த னர்.
இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீ சார் விசா ரணை மேற்கொ ண்டு வடிவேல் என்ற வெள்ளை யனை கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.
- இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மாரப்பன் பாளையம் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் எல். பீ .பி. வாய்க்கால் செல்கிறது
இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 200 மீட்டருக்கு பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யபட்டு பணிகள் தொடங்கியது.
இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்த ப்பட்டது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் வாய்க்கால் பக்கவாட்டு தடுப்பு சுவர் வேலை தொடங்கப்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஈரோடு நீர்வள துறை செயற் பொறியாளர் திருமூர்த்தி, நீர்வள துறை உதவி செயற் பொறியாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் இங்கு கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை கைது செய்து சிவகிரி உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு டன் நீர்வளது றை உதவி பொறி யாளர் முருகேசன் முன்னி லை யில் தடுப்புச்சுவர் அமை க்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வாய்க்கா லின் இடது கரையில் பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க கான்கிரீட் சுவர் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.
இதையடுத்து சிவகிரி பகுதியில் விவசாயி கள் ஒன்று திரண்டு இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்ப ட்டது.
- கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாராளுமன்ற தேர்தலை இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிப்பு செய்வோம் என கூறினர்.
நம்பியூர்:
கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு கரைகளிலும் முழுக்க மண்ணால் கட்டப்பட்டது
இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இந்த வாய்களின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்காலில் ஆண்டுக்கு இரு முறை ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை ஒரு முறையும், ஜனவரி 1 -ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை மற்றொரு முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டில் அரசு கீழ்பவானி கால்வாயின் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தியதால் அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது மீண்டும் கான்கிரீட் தளம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கடந்த மே 1-ந் தேதி இந்த திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டது.
இந்த திட்டம் தொடங்கினால் கீழ்பவானி பாசன பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டலை கடுமையாக பாதிக்கும் என இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கான்கிரீட் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கவும் வலியுறுத்தியும், அதற்கான அரசாணையை 10-ந் தேதி வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் 26-வது மைல் கல் பகுதியில் இறங்கி கரும்பு, தேங்காய், வாழைத்தாருடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய விவசாயிகள் எங்களது கோரிக்கையை ஏற்க விட்டால் 11-ந் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவசா யிகள் முற்றுகையிடுவோம்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிப்பு செய்வோம் என கூறினர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோ வில் அடுத்துள்ள எலிஸ் பேட்டை பகுதியை சேர்ந்த வர் சக்திவேல். இவர் ஈரோ ட்டில் ஆடிட்டராக பணியா ற்றி வருகிறார்.
இவரது பெற்றோர் சாமியப்பன், சரஸ்வதி அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் விட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாமியப்பன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிச் சென்று ள்ளனர்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சாமியப்பன், சரஸ்வதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொ ள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து காஞ்சிக்கோ யில் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






