என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மாபேட்டை அருகே"

    • ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது.
    • அப்போது பசு 2 கடேரி கன்றுகளை ஈன்றிருந்தது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை புதுக்கோட்ரஸ் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (40). இவர் பவானி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி கோமதி என்பவர் அப்பகுதியில் 2 பசு மாடு மற்றும் ஒரு எருமை மாடு ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது. திடீரென பசு கத்தும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து அவரகள் சென்று பார்த்தனர். அப்போது பசு 2 கடேரி (பெண்) கன்றுகளை ஈன்றிருந்தது. 2 கன்றுகளை ஈன்ற பசுவை அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்து சென்றனர்.

    ×