என் மலர்tooltip icon

    ஈரோடு

    • யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.
    • குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது வாடிக்கையான ஒன்று தான்.

    இதில் யானைகள், மான், காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒருவர் நடுரோட்டில் குள்ளநரி கூட்டம் ஒன்று கடப்பதை பார்த்து அங்கேயே வாகனத்தை நிறுத்தி செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார்.

    குள்ளநரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 8 நரிகள் ரோட்டை கடந்தன. பொதுவாகவே காலையில் நரி முகத்தில் முழித்தால் நல்லது நடக்கும் என முன்னோர்கள் சொல்வார்கள். அதேபோல் இவர் குள்ளநரியை பார்த்து விட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

    அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் குள்ள நரி கூட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் கணிசமான எண்களில் இருக்கும் குள்ள நரிகளை பார்ப்பது இதுவே முதல்முறை என சுற்றுலா பயணிகள் கூறி மகிழ்ந்தார்.

    • கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசன தாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் வழித்தடத்தில், வாய்க்காலில் இறங்கி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த சென்ன சமுத்திரம் கிளை பிரிவு வாய்க்காலில் இறங்கி விவசாயிகள், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்.276-ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் கசிவு நீர் பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாழைத்தார், மஞ்சள் ஆகியவற்றை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    • பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து ரூ.720 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.

    ஈரோடு,

    ஈரோடு பாரதிபுரம் அருகே உள்ள முற்காட்டில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதன்பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, சீட்டாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டை சேர்ந்த தேவராஜ்(30), கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பினை சேர்ந்த லோகநாதன்(39), சூரம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த கண்ணன்(28), பாரதிபுரத்தை சேர்ந்த அருண்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.720 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளிததனர்
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்க ளை அவரிடம் வழங்கினர். அப்போது விவசாயிகள் திரண்டு வந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி கலெக்டரிடம் மனு வழ ங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தென்னை-பனையிலிருந்து கள் இறக்கி, விற்க அனுமதிக்க வேண் டும், தேங்காய், கடலை நல் லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேர டியாக கொள்முதல் செய்து மானிய விலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும்,

    இந்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை யாக ரூ.150 நிர்ணயம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணி களுக்கு மட்டுமே பயன்ப டுத்த வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழை ப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும், இந்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயி களுக்கும் தனிப்பட்ட முறை யில் இழப்பீடு பெரும் வகை யில் மாற்றி அமைக்க வேண் டும்,

    வனவிலங்கால் தாக்க ப்பட்டு உயிர் இழப்பு ஏற்ப டும் குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்,அரசு விவசாயிகள் பெற்ற அனை த்து கடன்களையும் தள்ளு படி செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் விவசாயி களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பவானிசாகர் சிப்காட் திட்டங்களை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத் தினர். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு அனுமதியின்றி மது விற்ற 9 பேர் கைது செய்யபட்டனர்
    • 60 மதுபாட்டில்கள் பறிமுல்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ப தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுண், கடம்பூர், சித்தோடு, வரப்பாளையம், பங்களாபுதூர், ஈரோடு தெற்கு, சிறுவலூர், கவுந்த ப்பாடி போலீசார் அந்தந்த சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனும தியின்றி சட்டவிரோதமாக மதுவிற்றுக் கொண்டிருந்த சத்தியமங்கலம் கடம்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (வயது 48), கவுந்தப்பாடி அய்யன் வலசை சேர்ந்த கார்த்திகேயன் (32), நம்பியூர் சூரியப்பம்பாளையம் நாகராஜன் (34), சாஸ்திரி நகர் மணிமுத்து என்ற ஜெயக்குமார் (50), கோபி கொண்டையம்பாளையம் ஈஸ்வரன் (53), நம்பியூர் ராயர் பாளையம் சரஸ்வதி (54), சித்தோடு கொங்கம்பா ளையம் மணி (60), கடம்பூர் பசுவனபுரம் பழனிவேல் (28), புதுக்கோட்டை கறம்ப க்குடி சாமுவேல் (39) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவ ர்கள் வைத்திருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த காசி பாளையத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (40), பிரசாந்த் (30) ஆகியோரை ஈரோடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்தி ருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி-தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது
    • ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள படுகிறது

    ஈரோடு, ஆக. 7-

    ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் இத் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ஊத்துக்காடு, இரா யபாளையம், மூலக்கரை, மேட்டுக்கடை முதல் நசிய னூர் ரோடு, இராயபா ளையம் ரோடு, வசந்தம் கார்டன், பெரிய வாய்க்கால் மேடு, ஊணாட்சிபுதூர் மற் றும் கந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போல் ஈரோடு சூரி யம்பாளையம், கவுந்த ப்பாடி, தளவாய்பேட்டை ஆகிய துணை மின் நிலைய ங்களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின் நிலை யங்களில் இருந்து மின்விநி யோகம் பெறும் பூலப்பா ளையம், பெரிய புலியூர், வளையக்காரபாளையம், மூவேந்தர் நகர், மார ப்பம்பாளையம், சேவாக் கவுண்டனூர், கிரேஸ் நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் ஆவரங்காட்டூர், ஐயம்பா ளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், செல்ல குமாரபாளையம் மற்றும் வைரமங்கலம், சீறைமீட்டா ன் பாளையம், குண்டு செ ட்டிபாளையம், சி.மேட்டூர், வெங்கமேடு, சூளைமேடு, கவுண்டம்புதூர் மற்றும் குட்டி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செ வ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொ றியாளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.

    • பவானிசாகர் அணை நிலவரம் வெளியிடபட்டுள்ளது
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1014 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கோபி அருகே வாகன விபத்திலி 2 கட்டிட தொழிலாளிகள் பலியானார்
    • காயம் அடைந்த தம்பதிக்கு தீவிர சிகிச்சை

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.

    கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்று ள்ளனர். அப்போது எதிர்தி சையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டி ருந்தார்.

    விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு காமாட்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(38). இவர், ஈரோடு தெப்பக்குளம் வீதியில் சொந்தமாக டூவீலர் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தமிழ்செல்வன் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். கடந்த 31ம் தேதி தமிழ்செல்வனுக்கும், பானுபிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பானுபிரியா கோபித்து கொண்டு அருகில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தமிழ்செல்வன் அதிக மதுபோதையில் வீட்டின் மாடியில் தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து தமிழ்செல்வனின் அண்ணன் சென்று பார்த்தபோது, தமிழ்செல்வன் எவ்வித அசைவும் இன்றி மயங்கி கிடப்பதை பார்த்தார். இதையடுத்து தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு தமிழ்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பானுபிரியா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • குடிநீர் வழங்க கோரி நடந்தது

    பவானி,

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரத நல்லூர் அடுத்த கூலிக்காரன் பாளையம், பொரட்டு க்காட்டூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து வரதநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் கிடைக்க வில்லை என கூறப்படு கிறது.

    இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் கூலிக்காரன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிராம ஊராட்சி மாரிமுத்து மற்றும் வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் உரிய நட வடி க்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பிற சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்களில் வரி மற்றும் நன்கொடைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    • உத்தரவு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முறையீடு செய்தும், அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட அவல்பூந்துறை கஸ்பாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கீழ் 27 உபகோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து வேறு சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள 70 குடும்பங்களை ஒதுக்கி வைத்து வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சட்டத்திற்கு புறம்பான தடையிலிருந்து விடுவித்து வழிபாட்டு உரிமையை பெற்று தரக்கோரி ஈரோடு கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

    இந்த மனு தொடர்பாக இரு தரப்பினருடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தாசில்தார் இளஞ்செழியன் கூறியதாவது:-

    ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை எந்த ஒரு காரணத்திற்காவும் கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பது தவறான நடைமுறை, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

    பிற சமுதாயத்தில் திருமண உறவு வைத்துள்ள குடும்பங்களில் வரி மற்றும் நன்கொடைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். மகாசபை கூட்டம், சுப நிகழ்ச்சிகள், அசுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பு ஏதுவும் தெரிவிக்க கூடாது.

    மேலும், அவர்களுக்கு சமுதாய வழக்கப்படி சீர் மற்றும் சடங்கு செய்யும் நிகழ்வுகள், குலதெய்வ வெண்கல சிலை வழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் உபகோவில் நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குள் கலந்து பேசி, இனி வரும் காலங்களில் மேற்படி தலைமை கோவில்கள் மற்றும் உப கோவில்களில் இந்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை தவிர்ப்பதற்கும், அனைவரும் சட்ட ரீதியான சமமான உரிமை வழங்கிட ஆவண செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது.

    இந்த உத்தரவு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முறையீடு செய்தும், அல்லது உரிய நீதிமன்றத்தை அணுகலாம்.

    இவ்வாறு தாசில்தார் இளங்செழியன் கூறி உத்தரவிட்டார்.

    • கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சத்திய நாயக்கன் பாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது55). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மேகராஜ் (19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காந்தி தனது உறவினர் வீட்டு கிடா விருந்துக்காக இளைய மகன் மேகராஜை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள சங்கிலிகருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்றுள்ளார். கிடா விருந்தில் கலந்து கொண்டு விட்டு மேகராஜ் மற்றும் உறவினர்கள் 10 பேர் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு முன்பாக உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    அங்கு மேகராஜ் மற்றும் உறவினர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மேகராஜ் நீரில் மூழ்க தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. சிறிது நேரத்தில் மேகராஜ் நீரில் மூழ்கினார். உறவினர்கள் மேகராஜ் நீரில் மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர்.

    உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மேகராஜை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் மேகராஜை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதையடுத்து அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மேகராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    ×