என் மலர்
ஈரோடு
- எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது.
- தொழிற்சாலையை மூட க்கோரி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே தொப்ப ம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வனப்பகு தியை ெயாட்டி விவசாய விளை நிலங்களுக்கு இடையே எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது.
இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தி ருந்தனர்.
அனுமதியின்றி செயல்ப டும் இந்த ரப்பர் ஆலையால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் கெட்டு விவசாயம் பாதிக்கப்படுவ தாக குற்றம் சாட்டிய விவசாயிகள் மற்றும் விண்ண ப்பள்ளி, விளாமுண்டி விவசாயிகள் நல சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவத்தன்று தொழிற்சாலையை மூட க்கோரி ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ரப்பர் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும் இது சம்பந்தமாக அரசுத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி அமைக்கப்பட்ட தொழிற்சாலையை நிரந்த ரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
- 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர்.கலைஞர் பிறந்தநாளை யொட்டி 7-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டிக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் கந்த சாமி, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் குமரேசன்,
விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கருப்புசாமி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கோகுல்பிரசாத் முதல் பரிசு ரூ.5,000-ம், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தமிழ்க்கனி 2-ம் பரிசு ரூ.3000-ம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவி இலக்கியா 3-ம் பரிசு ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.
மேலும் சிறப்பு பரிசாக ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தேவபாலா ரூ.2000-ம், தவிட்டுப் பாளையம் அரசு உயர்நிலை ப்பள்ளி மாணவி ரிதனிகா ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.
- பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர்.
- பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் மேக்கூர் இந்திரா நகர் பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்மநபர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முற்பட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்கு வைத்திருப்பதும், அவரிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (52) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றதாக சத்தி ஜலிகுழி வீதியை சேர்ந்த நாகராஜ்(69) என்பவரை போலீசார் கைது செய்து 24 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடியாக உள்ளது.
- குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.48 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.51 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1205 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 500 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
இதேப்போல் மற்ற அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.48 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.59 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.
- வைக்கோல் போரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சை துறை யம்பாளையம் மாதேஸ்வரன் கோவில் செல்லும் வழியில் குமார் என்பவர் குடி இருந்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது.
இந்த நிலையில் அவரது தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் கோபி செட்டிபாளையம் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக்கோல் போர் முழு வதும் எரிந்து சேதமாகின.
வைக்கோல் போர் அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீ பரவி அருகே இருந்த வைக்கோல் போரில் பிடித்து தீ விபத்து ஏற்பட்ட தாக போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.
ஈரோடு:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வேலை தேடி ரெயில் மூலம் சம்பவத்தன்று இரவு ஈரோடு வந்துள்ளார். ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுப்பகுதிக்கு வந்த அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர்.
அந்த கும்பல் அந்த வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் அந்த வட மாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபரோ புகார் ஏதும் அளிக்காமல் ரெயில் ஏறி கேரளாவில் உள்ள நண்பரை பார்க்க சென்று விட்டார்.
- தேர்த்திருவிழா நாளை தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
- அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்.
திருவிழாவில் கலந்துகொண்டு மக்கள் சிரமம் இன்றி வந்து செல்ல ஈரோடு மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குருநாதசாமி கோவில் திருவிழாவையொட்டி ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்பாடி, பர்கூர், வெள்ளி திருப்பூர், எண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து அந்தியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் ரோடு அம்மன் நகர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் காணவில்லை. இதை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த தனியார் நிறுவன உரிமை யாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் புஞ்சை புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகித் (வயது 20) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ரோகித்தை கைது செய்து நீதிமன்ற கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரோகித் மீது கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு கள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
- இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
வழக்கமாக சாதாரண நாட்களில் 7000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது.
ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.
ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கிய பெண்கள் 100, 200 என்ற அளவில் தக்காளியை வாங்கி சென்றனர். ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியதால் விளையும் சரிய தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.80-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 2000 தக்காளி தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.70-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- கொளப்பலூரை சேர்ந்த சோளை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் கமாராஜ் நகரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் சிறுவலூர் போலீசார் அங்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கொளப்பலூர் காமராஜ் நகரை சேர்ந்த சோளை (41) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது.
- அப்போது பசு 2 கடேரி கன்றுகளை ஈன்றிருந்தது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை புதுக்கோட்ரஸ் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (40). இவர் பவானி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கோமதி என்பவர் அப்பகுதியில் 2 பசு மாடு மற்றும் ஒரு எருமை மாடு ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு பசு நிறைமாத சினையாக இருந்தது. திடீரென பசு கத்தும் சத்தம் கேட்டது.
இதையடுத்து அவரகள் சென்று பார்த்தனர். அப்போது பசு 2 கடேரி (பெண்) கன்றுகளை ஈன்றிருந்தது. 2 கன்றுகளை ஈன்ற பசுவை அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்து சென்றனர்.
- சங்கர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
- ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லாகாபுரம் அருகே உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (53). இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சங்கர் கொங்கணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சங்கர் கரட்டாங்காடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற அங்கு இரவில் தங்கினார். அப்போது சங்கர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இன்று காலை வெளியே சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சங்கர் சென்றார். வெளியே சென்ற சங்கர் நேராக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அந்த சமயத்தில் தண்டவாளத்தில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சங்கர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சங்கர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் இந்த கடிதம் கிடைக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனக்கு கடன் தொல்லை அதிகம் உள்ளது.
அதனால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை. நான் விருப்பப்பட்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இப்படிக்கு சங்கர் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் ரெயில் முன் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






