என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.
    • காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் தண்ணீர் பந்தல் பாளையத்தை சோ்ந்தவர் பழனிச்சாமி (38). மில் தொழிலாளி. இவரது மனைவி செல்வி என்கிற ராதா (35). மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்.

    ராதா அவரது குழுவில் கடன் பெற சிலருக்கு ஜாமீன் கையெழுத் திட்டுள்ளார். அவர்கள் கடன் பெற்று முறையாக செலுத்தவில்லை. இதனால் ஜாமீன் கையெழுத்திட்ட அவர் பெற்ற கடன் தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதில் மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலை முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் பகுதியில் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் என்னும் வைரஸ் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா இன்று தொடங்கி 12 ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் மாநில அளவில் மாடு, குதிரைகள், அரிய இன வகை கால்நடைகள் கால்நடை சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூர் பகுதியில் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் என்னும் வைரஸ் நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் ராஜஸ்தான் குதிரைகளுக்கு காலண்டர்ஸ் வைரஸ் நோய் தாக்குதல் இருப்பதாலும், இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அந்தியூர் குதிரை சந்தையில் அனுமதி இல்லை என ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    மேலும் அந்தியூர் குருநாதசாமி கோவில் கால்நடை சந்தைக்கு வரும் குதிரைகள் முறைப்படி பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    • வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இதன் காரணமாக சுதந்திர தின விழா ஆணைக்கல்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவின் சுதந்திர தின விழா ஒரு மாதம் ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு வ. உ. சி. விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாக்கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    சுந்திர தினத்தன்று கலெக்டர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரியாதையை வாகனங்கள் சென்று பார்வையிடுவார்.

    அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறும். சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் கவுரவிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விழா ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்திற்கு பதில் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தற்போது செயற்கை இலை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழா அங்கு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சுதந்திர தின விழா ஆணைக்கல்பாளையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

    பின்னர் போலீஸ் மரியா தையை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    • தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தேர்த் திருவிழா தொடங்கி நடப்பது வழக்கம். மேலும் கோவில் விழாவில் புகழ் பெற்ற கால்நடை சந்தையும் நடக்கும்.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டு கோவில் விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்தாண்டு கோவில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தது.

    இதையடுத்து இந்த ஆண்டுக்கான அந்தியூர் புது ப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவுக்கான தேர்கள் தயார் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    இதை தொடர்ந்து இன்று காலை காமாட்சி அம்மன், பெருமாள் சாமி, குருநாத சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் பெருமாள் சாமி, மற்றொரு தேரில் குருநாத சாமி மற்றும் காமாட்சி அம்மன் தனி தனி தேரில் எழுந்தருளினர்.

    இதையடுத்து குருநாதசாமி கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு சென்றது. தேர்களை பக்தர்கள் சுமந்தப்படி சென்றனர். தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.

    இதில் அந்தியூர், புது ப்பாளையம், கோபி செட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் இன்று கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    இதை தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு வனக்கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு மீண்டும் குருநாதசாமி கோவிலுக்கு வந்தடைகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். விழா வரும் 12-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

    விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தென் இந்தியாவிலேயே புகழ் பெற்ற குதிரை மற்றும் மாட்டுச் சந்தை இன்று காலை தொடங்கியது.

    இவ்விழா மற்றும் கால்நடை சந்தையை காண தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.

    இந்த கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர்.

    மன்னர் காலங்களில் போருக்கு பயன்படுத்திய உயர் ரக குதிரைகளான மார்வார், நொக்ரா, கத்தியவார் உள்ளிட்டவை ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் விற்பனைக்காக வந்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள், கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி மற்றும் ஆந்திரா வை பூர்விமாகக் கொண்ட ஓங்கோல் இன மாடுகளும் கால்நடை சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளை வாங்கிச் செல்வதற்கு தமிழக மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர்.

    இந்த கால்நடை சந்தையை காண ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு கழித்து சென்றனர்

    கோவில் திருவிழாவு க்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பி. எஸ்.எஸ். சாந்தப்பன், கோவில் செயல் அலுவலர் மோகனபிரியா மற்றும் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    விழாவையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    • முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.
    • டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நேரில் சென்று மயங்கிய கிடந்த முதியவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவருக்கு 55 வயது முதல் 60 வயது இருக்கும் எனவும், ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 3 சண்டைக்கோழிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகு தியில் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கோழிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த புதூர் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற மகேஷ் (வயது 47), மொட க்குறிச்சி ஜெயக்குமார் (25), கருங்கல்பாளையம் பிர னேஷ் (வயது 20), பஞ்சலி ங்கபுரம் விக்னேஷ் (24), கரூர் மாவட்டம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்து 3 சண்டைக்கோழிகள் மற்றும் 1500 பண த்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது போலீசார் வழ க்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரம் அய்யன்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (51). டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இளங்கோவன் தற்போது ஈரோடு மாமரத்துப் பாளையம் சக்தி நகரில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.

    இளங்கோவனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது பழைய நினைவுகளை மறந்து விட்டார். இதற்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று அதிகாலை இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த இள ங்கோ வனின் குடும்பத்தி னர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இளங்கோவன் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சு வார்த்தையை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்தனர்.
    • இதனால் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மீண்டும் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையாக இலவச திட்டத்தில் 1.63 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை கள் கைத்தறி மற்றும் விசைத்தறி, பெடல் தறிக ளில் உற்பத்தி செய்ய அறிவித்த னர். கடந்த மாதம் 19-ந் தேதி நூலுக்கான டெண்டர் முன் வைத்து கடந்த 2-ந் தேதி விலைப்பட்டியல் டெ ண்டர் ஓப்பன் செய்தனர்.

    ஒப்பந்ததாரர் முன்வை த்த டெண்டர் தொகையை அதிகாரிகள் ஏற்கவில்லை. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடந்த நிலையில் கடந்த 4-ந் தேதி நடந்த பேச்சு வார்த்தையை ஒப்பந்ததாரர்கள் புறக்கணி த்தனர். இதனால் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மீண்டும் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர் கூட்டமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:

    ஈரோட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த விழாவில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகஸ்ட் 5-ந் தேதி நூல் விநியோ கிக்கப்படும் 8-ந் தேதி உற்ப த்தி தொடங்கும் என்றார். கடந்த 5-ம் தேதி நடந்த நூல் டெண்டரில் விலை நிர்ணயத்தில் இழுபறி ஏற்பட்டு முடிவுக்கு வரவி ல்லை. இதனால் வேட்டி, சேலை உற்பத்தி மேலும் பல வாரம் தாமதமாகும்.

    கடந்த 2001-ம் ஆண்டு முதல் இது போன்ற கால ங்களில் 15 முதல் 30 நாள் தேவைக்கான நூலை வெளிமார்க்கெட்டில் அரசு ஏற்கும் விலையில் வாங்கி அரசு நூற்பாலை வழங்கும் நூல் வந்ததும் அதை பய ன்படுத்தவர். அதற்குள் 30 நாட்களுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி நிறைவு பெற்றிருக்கும்.

    இந்த நடைமுறையை செயல்படுத்த எதிர்பா ர்க்கிறோம். தற்போதைய நிலையில் வேட்டிக்கான 40 காட்டன் நூல், 3400 பை (வார்ப்) கூட்டுறவு நூற்பாலை மூலம் கைத்தறி துறை பெற்று மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது.

    இந்த நூல் மட்டும் வந்தால் வேட்டி உற்பத்தி செய்ய இயலாது. பார்டருக்கானநூலும், ஊடைக்கான நூலும் வந்தால் மட்டுமே உற்பத்தி தொங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறு ம்போது,

    இலவச வேட்டி, சேலைக்கான டெண்டர் கோரப்பட்டு அரசின் நிலையில் உள்ளது. வேட்டிக்கான நூல் 300 பை (ஒரு பை 50 கிலோ நூல்) வந்துள்ளது. விரைவில் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தி யாளர் சங்கத்துக்கு வழங்குவோம். விரைவில் பிறர் நூல் வந்துவிடும் என்றார்.

    • கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 12-ந் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இரு ந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த, 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொ றியியல் பட்டம் படித்தவர்கள், மருத்துவத்துறை சா ர்ந்த செவிலியர்கள், ஆய்வ க உதவியாளர்கள், லேப் டெக்னிசீயன்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கல ந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நா ட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலைநாடு நர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணி யமர்த்தம் செய்யப்படும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்ப டமாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல்நெறி வழிகாட்டும் மைய த்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, 9499055942 அல்லது மின்னஞ்சல் முகவ ரி. erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொ டர்பு கொள்ளலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 

    • முத்துசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ராக்கம்மாபுதூர் அருகே அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அறச்சலூர் இலவந்தம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
    • பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    கோபி:

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    அப்போது கோபிசெட்டி பாளையம் அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் சாமி என்பவர் இன்று காலை கோபி பச்சைமலை கோவிலுக்கு தனது 2 காளைகளுடன் வந்திருந்தார்.

    பின்னர் பால் குடத்துடன் பெருமாள் சாமி தனது 2 காளையுடன் 161 படிகளை ஏறி முருகனை வழிபட்டார். தனது மாடுகளுடன் முருகனை வழிபட வந்த பெருமாள் சாமியை கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது.
    • இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி வார சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள்.

    சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது. தற்போது ஆடி 18 முடிவடைந்ததை ஒட்டி வியாபாரம் மீண்டும் மந்த நிலையில் நடைபெறுகிறது.

    இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். தெலுங்கா னா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனால் மொத்த விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. சில்லரை விற்பனை 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக இருந்தது. ஆவணி மாதம் வரை வியாபாரம் சுமாராக இருக்கும் என்றும் அதன் பிறகு வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    ×