என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer commits suicide by"

    • சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
    • இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குப்புசாமி கடந்த சில நாட்களாக மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குப்புசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் (49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    நட்ராஜ் தனது சகோதரர் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் குடியிருந்த கொண்டு விவசாயம் செய்து வந்தார். நட்ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×