விஷம் குடித்து விவசாயி தற்கொலை

நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Published on

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் (49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நட்ராஜ் தனது சகோதரர் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் குடியிருந்த கொண்டு விவசாயம் செய்து வந்தார். நட்ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com