என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Pongal Festival"

    • சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
    • நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோட்டில் சென்னிமலை நகரின் எல்லையில் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்து வந்தது. 27-ந் தேதி இரவு கும்பம்பாலித்தல் நடந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு மாவிளக்கு பூஜைகள் நடந்தது. இன்று காலை முதல் பொங்கல் விழா நடந்தது. இதில் பொங்கல் வைத்து நகரை காப்பாற்றும் எல்லை மாகாளி அம்மனுக்கு ஆடு, கோழி பலிகொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து நாளை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.

    • வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்காட்டுவலசு பகுதியில் இந்து சமய அறநிலையத்து றைக்கு சொந்தமான அருள்மிகு வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு கரகம் எடுத்தல், காவிரியில் தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், பெருபூஜை செய்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இதையடுத்து இன்று மாலை மறுபூஜை செய்வதுடன் பொங்கல் திருவிழா நிறைவு பெற உள்ளது.

    ×