ஈரோட்டில் மது விற்ற 2 பேர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் மது விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு அண்ணா தியேட்டர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இரும்பநாடு பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் தவமணிசெல்வம் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அறச்சலூர் தலவுமலை எல்பிபீ வாய்க்கால் அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக குறிஞ்சி நகரை சேர்ந்த விஜயன் (36) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com