என் மலர்
ஈரோடு
- ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈரோடு கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் சாமிகவுண்டம்பாளையம்,
சாமிகவுண்டம்பாளையம்புதூர், குறிச்சான்வலசு, சில்லான்காடு, முள்ளம்பட்டி, பெருந்துறை முதல் பவானி மெயின் ரோடு,
நசியனூர் நடு வீதி, நமச்சிலான்மடை, கோட்டப்பெரியகாடு மற்றம் புதுகாலனி ஆகிய பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ் பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடி பெரும் தேர் திருவிழா நேற்று தொடங்கியது.
காலை 11 மணியளவில் புதுப்பாளையம் கோவிலில் இருந்து வனக்கோவிலுக்கு காமாட்சி அம்மன் சப்பரத் தேரில் முன் செல்ல, பக்தர்கள் தோளில் சுமந்தபடி பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய தெய்வங்கள் 60 அடி மக மோருதேர்களில் நேற்று வனக்கோவிலை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் வனக்கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த தெய்வங்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் வனக்கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலை வந்து அடைந்தது.
இன்றிலிருந்து 3 நாட்கள் புதுப்பாளையம் கோவிலில் மூன்று தெய்வங்களும் பக்தர்களுக்கு சிறப்புஅலங்காரத்தி ல் அருள்பாலித்து வருகின்றனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வரு கின்றனர்.
இந்த திருவிழாவின் போது மழை பொழிந்து அந்தப் பகுதி மட்டும் குளி ர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பொழிந்த மழை 4 மணி வரை பெய்தது.
இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் வெப்பத்திலிருந்து, குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் குளிர்ச்சியான காற்றில் இருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
- தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவா னியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள பெருமாள்மலை அடிவாரப் பகுதியை சேர்ந்தவர் தண் டாயுதபாணி (வயது 36).
இவரின் தாய் தந்தை உடல் நல குறைவால் இறந்த நிலையில் தனியாக பெயிண்டர் வேலை செய்து அப்பகுதியில் வீடு ஒன்றில் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தண்டாயு தபாணி மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் தண்டாயு தபாணி வீட்டின் அருகில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் தண்டாயுதபாணி வீடு 2 நாட்களாக பூட்டியிருந்த நிலையில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
அப்போது தண்டாயுதபாணி இறந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்து கிடந்த த ண்டாயுதபாணி உடலை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தண்டாயுதபாணி உறவினர் ராஜவேல் இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.
- அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). இவருக்கு மூன்று3 மகள்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகள் நந்தினி (22) என்பவரை அந்தியூர் குழியூரை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கடந்த 6 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
குப்புசாமி, நந்தினிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேவராஜ் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
- பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான வரும் 15-ந் தேதியன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2023 முதல் 31.07.2023 முடிய) செலவின அறிக்கை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல்,
தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்த விவரத்தை முன்வைத்தல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்த விவரத்தினை உறுதி செய்தல்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகள் குறித்து விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் வேலை அட்டைகள் வழங்கியதை உறுதி செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொ ருட்கள் விவாதிக்கப்படும்.
அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- 4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மின் பகிர்மான வட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 24-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வெவ்வேறு பகுதிகளில் செல்லும் உயர அழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் உள்ள பல்வேறு இடங்களில் 3,210 மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. 61 பழுதடைந்த உயர் அழுத்த மின் கம்பங்கள், 119 பழுதடைந்த தாழ்வழுத்த மின்கம்பங்கள், 174 சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன.
இது தவிர 200 பகுதி களில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் சரி செய்து, 23 தாழ்வான உயர் அழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட மின்கம்பங்கள், 44 தாழ்வாக உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு இடையே நிறுவப்பட்ட பின் கம்பங்கள், 250 பழுதடைந்த இழுவை கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 292 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதடைந்த பீங்கான்கள் மாற்றப்பட்டுள்ளன. 17 பகுதிகளில் கண்டறி யப்பட்ட பழுதடைந்த மின் புதைவடை பெட்டி சரி செய்யப்பட்டுள்ளன.
592 பகுதிகளில் கண்டறியப்பட்ட பழுதான ஜம்பர் ஒயர் மாற்றப்பட்டுள்ளன. 140 மின் மாற்றி களில் உள்ள காற்று இடைவெளி திறப்பான் சீரமைக்கப்பட்டன.
மேலும் 513 மின் மாற்றி களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 128 மில் மாற்றிகளில் எண்ணெய் அளவு சரிபார்க்க ப்பட்டுள்ளது.
4 புதிய இரு வழி திறப்பான் அமைக்கப்பட்டுள்ளன. 39 பகுதிகளில் கண்டறியப்பட்ட வெளியில் தெரியும் நிலையில் இருந்த புதைவட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 562 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விட்ட நிலையில் இன்று 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1105 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
- கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.
ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.
இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.
- முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.
சென்னிமலை:
முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிரு த்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகையையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.
இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த பவள மலை முத்துகுமாரசாமி கோவிலில் ஆடி கிருத்திகை யை யொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.
இதையொட்டி கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் படியில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி அருள்மலை முருகன், மூல வாய்க்கால் முருகன், அம்மா பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில் களிலும் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மஞ்சள் வளாகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி ஆகிய பகுதிகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்,
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது 15200 மெ.டன் அளவுள்ள 5 கிட்டங்கிகள், 2 பரிவர்த்தனைக்கூடங்கள், 1 சூரிய உலர்களம் மற்றும் 4 உலர்களங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையான அளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகள் பார்வையி டப்பட்டது. யு.எம்.பி. மென்பொருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் முறை பார்வையிடப்பட்டது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் மறைமுக மஞ்சள் ஏலம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள 10000 மெ.டன் ஊறுர் கிட்டங்கியில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள மஞ்சள் மூட்டைகள் பார்வையிடப்பட்டது.
யு.எம்.பி. மென்பாருள் மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பார்வையிடப்பட்டன.
மேலும் விற்பனைக்கூட வளாகத்தினுள் பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைத்திட அறிவுறுத்தப்பட்டது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தினுள் உள்ள அக்மார்க் ஆய்வகம் பார்வையிடப்பட்டு அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கிடும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டது.
பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை தொகை ரூ.4249 லட்சம் மதிப்புள்ள 5761 மெ.டன் மஞ்சள் விளைபெருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 2440 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மஞ்சள் வளாகத்தில் ஏலத்தி ற்காக வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மாதிரிகளையும் பார்வையிட்டார்.
மேலும் ஆல்பா சாப்ட்வோ மூலம் மஞ்சள் ஏலம் நடைபெறும் செயல்முறை மற்றும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யும் முறைகள் பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடப்பட்டது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு நிதியாண்டில் நாளது வரை ரூ.131.27 கோடி மதிப்புள்ள 20830மெ.டன் மஞ்சள் விளைபொருள் பரிவர்த்தனை செய்யப்பட்டு 25,945 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, செயலாளர், துணை இயக்குநர் ஈரோடு விற்பனைக்குழு சாவித்திரி, கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, சுரேஸ், மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதனால் பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர்,
பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர்காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய
அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (பெருந்துறை) தெரிவித்துள்ளார்.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் அசோக் (31). இவர் சம்பவத்தன்று பெங்களூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அவருடைய 2 செல்போன்கள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் முதலாவது நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) என்பதும்,ரெயில் பயணயிடம் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






