அனுமதியின்றி மது விற்ற 3 பேர் மீது வழக்கு

போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி மது விற்ற 3 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானி, கோபி பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த தங்கவேல் (வயது 60), பவானி வரதநல்லூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), கோபி மல்லிபாளையத்தை சேர்ந்த காந்தி வேல் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com