search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "early morning to have darshan"

    • பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • பக்தர்கள் பலர் கூழ் மற்றும் பிரசாதம் வழங்கினர்.

    ஈரோடு:

    ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணா ரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கடைசி வெள்ளி க்கிழமை என்பதால் அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அம்மனை வழிப ட்டனர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

    கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார். மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நட ந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரிய ம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபு ரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரி யம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவி ல்களிலும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிச னம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதை தொடர்ந்து ஆடி கடைசி வெள்ளி க்கிழமை யான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு அருள் பாலித்தார். இன்று கடைசி வெள்ளி என்பதால் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அம்மனை தசித்து சென்றனர். இதனால் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிச னம் செய்தனர். அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகை த்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராள மான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்த னர். ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேற்கு புதுப்பாளையம் அங்கா ளம்மன் கோவில் சென்னி மலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிவகிரி பொன்காளி யம்மன், காமாட்சி அம்மன், எல்லை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. கவுந்தப்பாடி ராஜ ராஜே ஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வழிபாடு நடந்தது. பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது.

    இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிற ப்பு அலங்கா ரம் செய்யப்ப ட்டது. இன்று காலை முதலே பெண்கள் அதிகளவில் கோவி லுக்கு வந்து அம்மனை வழிப ட்டனர். பக்தர்கள் பலர் கூழ் மற்றும் பிரசாதம் வழங்கி னர்.

    மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணி க்கூண்டு கொங்கலம்மன் கோவிலில் காலை வியா பாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்ப ட்டது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர். மேலும் ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரியம்மன், ஓங்காளி யம்மன், சூரம்பட்டி மாரிய ம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரி யம்மன், கோட்டை பத்ரகா ளியம்மன் மற்றும் நகரில் உள்ள அனை த்து அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி கடைசி வெள்ளி யையொட்டி அதிகாலை யிலேயே பக்தர்கள் கோவி லுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×