என் மலர்
உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டி சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் உலா
- மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உடன் வள்ளி, தெய்வானை கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
- இதில் பக்தர்கள் காவடி எடுத்து ஆடிக்கொண்டும், வேல்கள் எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் தண்டாயுதபாணி சுவாமி சுப்ரமணியர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியருக்கும் உற்சவர் சுப்பிரமணியர் உடன் வள்ளி, தெய்வானைக்கும் பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உடன் வள்ளி, தெய்வானை கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் காவடி எடுத்து ஆடிக்கொண்டும், வேல்கள் எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பின்னர் சுப்பிரமணியர் உடன் வள்ளி, தெய்வானையை ஊஞ்சலில் அமர்த்தி பக்தி பாடல்கள் பாடி தாலாட்டு வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






