பெண் தற்கொலை

நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.
பெண் தற்கொலை
Published on

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). இவருக்கு மூன்று3 மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகள் நந்தினி (22) என்பவரை அந்தியூர் குழியூரை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கடந்த 6 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

குப்புசாமி, நந்தினிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தேவராஜூக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேவராஜ் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com