கூடுதல் விலைக்கு மது விற்ற முதியவர் மீது வழக்கு

முத்துசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூடுதல் விலைக்கு மது விற்ற முதியவர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ராக்கம்மாபுதூர் அருகே அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அறச்சலூர் இலவந்தம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com