கடன் பெற்றவர்கள் செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்திட்ட பெண் தற்கொலை

மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயன்றார்.காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பெற்றவர்கள் செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்திட்ட பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் தண்ணீர் பந்தல் பாளையத்தை சோ்ந்தவர் பழனிச்சாமி (38). மில் தொழிலாளி. இவரது மனைவி செல்வி என்கிற ராதா (35). மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்.

ராதா அவரது குழுவில் கடன் பெற சிலருக்கு ஜாமீன் கையெழுத் திட்டுள்ளார். அவர்கள் கடன் பெற்று முறையாக செலுத்தவில்லை. இதனால் ஜாமீன் கையெழுத்திட்ட அவர் பெற்ற கடன் தொகையை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் மனவேதனை அடைந்த ராதா எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு தற்கொலை முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com