என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • மதுரை வீரன் கோவில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை கலெக்ட ரிடம் வழங்கினர். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:- எங்கள் ஊர் மக்களின் குலதெய்வமான மதுரை வீரன் சுவாமி தங்க தேரினை எங்கள் ஊரில் உள்ள எங்கள் கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட உள்ளோம்.

    இதற்கான வாகன வசதி மற்றும் இதர வசதிகளை ஆற்றல் அற க்கட்டளையினர் செய்து தர முன்வந்துள்ளார்கள். ஆகையால் மதுரை வீரன் தேரானது பாதுகாப்பாக முழுவதும் மூடி வைக்க ப்பட்ட வாகனத்தில் எடுத்து வந்து எங்கள் ஊரில் வைத்து பூஜை செய்து வழிபட இருக்கிறோம். வழிபாடு முடிந்தவுடன் அதே வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்க உள்ளோம். எங்கள் ஊரில் எந்த பிரதான சாலையும் கிடை யாது. எங்கள் ஊரானது கிராமப் பகுதிகளின் உட்பகுதியில் உள்ள ஊராகும். எனவே பொது மக்களுக்கு எவ்விதமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வராது என்று உறுதியளிக்கிறோம். இந்த மதுரவீரன் கோவில் ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்ட த்திற்கு உட்பட்ட 32 பஞ்சா யத்துகளில் உள்ள எங்கள் ஊர் மக்களின் குல தெய்வமாக உள்ளது. ஆகையால் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.            

    • பட்டாசு வெடித்து விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி
    • பவானிசாகர் அணை பூங்கா அருகே 9 காட்டுயானைகள் கூட்டமாக சுற்றி திரிவதால் பரபரப்பு ஏற்பட்டது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பகுதி அருகே வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பூங்காவுக்குள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வன பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பூங்காவுக்குள் நுழை ந்தது. பின்னர் வனத்துறை யினர் நீண்ட போராட்ட த்துக்கு பிறகு அந்த யானை யை வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பவானிசாகர் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.

    இது குறித்து பவானிசாகர் மற்றும் விளா முண்டி வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர். பின்னர் அந்த யானை கூட்டம் ஊருக்குள் வராதவாறு பட்டாசை வெடித்தும், அதிக ஒலி எழுப்பும் சைர னை ஒழிக்க விட்டும் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

    ஈரோடு,

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளை சே ர்ந்த 23 மாற்றுத்திறனா ளிகள் உட்பட 43 மாற்றுத்தி றனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 7 வருடங்களாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலசங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பா க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகி ன்றனர். இது தொடர்பாக மாவ ட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலை யில் இன்று காலை தமி ழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கங்க ளின் கூட்டமைப்பு தலை வர் நாகரத்தினம் தலைமை யில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரப ரப்பு நிலவியது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்க ளின் கூட்டமைப்பு தலை வர் நாகரத்தினம் கூறும்போ து- கடந்த 7 வருடங்களாக 43 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவி ல்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், 43 மாற்றுத்திறனாளி களுக்கும் இலவச வீட்டும னை பட்டா வழங்க மா வட்ட கலெக்டர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போரா ட்டம் தொடரும் என்றார். இதனையடுத்து அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலைப் பொருள்-மது விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசலூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பதாகவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டினர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட பள்ளபாளையம் ரவி (வயது 58), மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சானர்பாளையம் சிவன் மூர்த்தி (47) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைபொருள் விற்ற 4 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு சூரம்பட்டி, சத்தி, அம்மாபேட்டை, ஈரோடு டவுண் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 73), சத்தி வரதம்பாளையம் சகாதேவன் (50), அந்தியூர் மாரியப்பன் (37), மூலப்பட்டறை ரோடு பகுதியைச் சேர்ந்த வீரேந்திர யாதவ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது
    • ஒத்திகையை கலெக்டர், எஸ்.பி. பார்வையிட்டனர்

    ஈரோடு,

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுத ந்திர தின விழா கொண்டா டப்பட்டு வருகிறது. தற் போது விளையாட்டு மைதா னத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கி ழமை) சுதந்திர தின விழா ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நடக்கிறது. நாளை காலை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தேசியக்கொ டியை ஏற்றி வைத்து மரியா தை செலுத்துகிறார்.

    அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சுத ந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் கவுரவி த்து, அரசு துறையில் சிறப்பாக பணியா ற்றிய அலுவல ர்கள், பணியாள ர்கள் மற்றும் தன்னார்வ லர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு அரசு இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஆணைக்கல்பாளை யம் ஆயுதப்படை மைதா னத்தில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த அணி வகுப்பு ஒத்திகையை கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் திறந்த வெளி ஜிப்பில் சென்று பார்வையிட்டனர். இதில் போலீசாருடன், ஊர் காவல் படையினர், தேசிய மாணவர் படையி னர் கம்பீரமாக நடந்து சென்றனர். இதைத் தொட ர்ந்து கலெக்டர் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம், ஏ.எஸ்.பி. தானஸ் பிரியா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெளியிடபட்டுள்ளது
    • வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடி ப்பு பகுதியில் மழைப்பொ ழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வரு கிறது. இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 674 கன அடியாக குறைந்து ள்ளது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி யும் என மொத்தம் அணை யில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகி றது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.11 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 18.53 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.

    • குருநாதசாமி கோவில் விழாவில் அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
    • அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது ப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்த ர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வந்து அங்கு அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்ச ங்களை கண்டு களித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் குதிரை சந்தையை பார்த்து சென்றனர். மேலும் குடும்பத்துடன் பொது மககள் வந்து அங்கு அமைத்துள்ள பொழுது போக்கு அம்மசங்களில் விளையாடி குதூகளித்தனர்.

    இதனால் அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன. தொட ர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. சிறிது தூரத்தை கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆகின. இதனால் அந்தியூர் பகுதியில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து அத்தாணி சாலையில் பிரம்மதேசம் பிரிவு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் வனக்கோவில் புதுப்பாளையம் குருநாத சாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து பொழுது போக்கு நிகழ்ச்சி களை கண்டு களித்து சென்றனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்தனர். போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    மேலும் போலீ சார் பொதுமக்களோடு கூட்டத்தினுள் சென்று திருட்டு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தொடர்ந்த கண்காணித்து வந்தனர். வழக்கம்போல் குருநாதசாமி திருவிழாவின் போது வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த ஆண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இது வரையில் இல்லாத அளவிற்கு கூட்டம் கட்டு க்கடங்காமல் மக்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    • லாட்டரி விற்றவர் கைது செய்யபட்டார்
    • அவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு,

    ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், கன்னிமார் கருப்பண்ண சாமி கோயில் அருகில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சிந்தன்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ஜாபர்சாதிக்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்

    ஈரோடு,

    ஈரோடு, கருங்கல்பாளையம், சொக்காய் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவரது மனைவி விசித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து மனைவி விசித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கவனித்து வந்த மணிகண்டன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் கழிப்பறையில் சேலையால் தூக்கிட்டு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கனி ராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தின் ஒயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் உடனே அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பெண் நசிமாபானு என்பதும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகனுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் தறிப்பட்டறை தொழிலாளியான இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து ள்ளார்.

    இந்நிலையில் தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏ.டி.எம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதனையடுத்து நசிமாபானுவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ஒயர் கட்டர் மற்றும் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமை தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள ரெயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×