பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சாவகாட்டுபாளையம் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்பியூர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ் மகன் ஆனந்தன் (வயது 38), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சரவண சுந்தரம் (46), ராமகிருஷ்ணன் மகன் கனகராஜ் (45), திருமூர்த்தி மகன் பிரசாந்த் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.1650-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com