தடையை மீறி மது விற்ற 4 பேர் கைது

போலீசார் சட்ட விரோதமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடையை மீறி மது விற்ற 4 பேர் கைது
Published on

ஈரோடு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாநிலம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி மதுபா னங்கள் ஏதேனும் விற்கப்ப டுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு தடையை மீறி சட்டவி ரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த ஆண்டிபாளையம் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 58), பவானி பூலப்பா ளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அஜய் (19) ஆகியோரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைப்போல் கவுந்த ப்பாடி, அங்கம்பாளையம் பகுதியில் தடையை மீறி மது விற்று கொண்டிருந்த கவுந்தப்பாடி பூபதி (53), அங்கம்பாளையம் ராசு மகன் விக்னேஷ் (28) ஆகி யோரை கவுந்தபாடி, சிறுவ லூர் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.680-ஐ போலீசார் பறிமு தல் செய்தனர். பின்னர் போலீசார் சட்ட விரோ தமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com