என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் அணைப்பகுதியில்"

    • பவானிசாகர் பூங்கா அருகே காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பகுதி அருகே வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பவானிசாகர் அணை நீர் தேக்க மேல் பகுதியிலும், பூங்காவுக்குள் வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பூங்காவுக்குள் நுழைந்தது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த யானையை வன ப்பகுதிக்குள் விரட்டினர்.

    இந்நிலையில் நேற்று காலை பவானிசாகர் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.

    இது குறித்து பவானிசாகர் மற்றும் விளா முண்டி வனத்துறையி னருக்கு பொதுமக்கள் தக வல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர்.

    பின்னர் அந்த யானை கூட்டம் ஊருக்குள் வராத வாறு பட்டாசை வெடித்தும், அதிக ஒலி எழுப்பும் சைரனை ஒழிக்க விட்டும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனால் அணை மேல் பகுதி சாலையை கடந்து மறு கரைக்கு ஓடிய யானைகள் மேட்டுப்பாளையம் சாலை வனப்பகுதிக்குள் சென்றனர். வனப்பகுதிக்கு ள் சென்ற யானை கூட்டம் மீண்டும் ஊருக்குள் திரும்ப வாய்ப்புள்ளதால் வனத்து றையினர் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, பகல் வேளையிலேயே யானைகள் கூட்டம் பவானிசாகர் அணைப்பகுதியில் நடமாடு வதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மட்டுமன்றி இந்த பகுதியை சேர்ந்த கா ல்நடை மேய்க்க செல்பவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    ×