என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல்களை"

    • கோவிலுக்குள் இருந்த 2 உண்டியல்கள் மாயமாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடை ந்தார்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோலகாளி பாளையம், இந்திரா நகரில் அண்ணமார் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் கோவில் பூஜையை முடித்துக் கொ ண்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

    இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை யொ ட்டி காலையில் பூசாரி கோ விலை திறக்க வந்து ள்ளார். அப்போது கோவி லின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போ து கோவிலுக்குள் இருந்த 2 உண்டியல்கள் மாயமாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடை ந்தார்.

    இது குறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர். பின்னர் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கோவிலின் 2 உண்டியல்கள் இருப்பதை கண்டனர். உண்டியலில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

    நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை பெ யர்த்து எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கே போட்டுவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த கோவில் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×