என் மலர்
ஈரோடு
- வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தி யூர் கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் வெள்ளை கவுண்டர் (வயது 83). இவரு க்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருப்பதால் தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததால் மன வேதனையில் இருந்த வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று கிருஷ்ணா புரம் கெட்டி சமுத்திரம் ஏரிக்க ரை அருகே உள்ள ஒரு மர த்தில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து வெ ள்ளை கவுண்டரின் மகள் பவளக்கொடி இதுகுறித்து அந்தியூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிதா ஹாதுன் (24). இவர் கடந்த 5 வருட ங்களாக சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வந்தார். இந்நிலையில் ஜாகிதா ஹா துனுக்கு உடல்நிலை பாதி க்கப்பட்டதாக கூறப்படுகி றது.
சம்பவத்தன்று விடு தியில் பின்புறம் உள்ள ஒரு மர த்தில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஜாகிதா ஹாதுனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்து றை மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோ தித்த மருத்து வர் ஜாகிதா ஹாதுன் ஏற்க னவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இதையடு த்து விடுதியின் வார்டன் நிஷா (28) சென்னி மலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சி கோவில் சின்னிய ம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் மாறன் (54). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபடுவார்.
இந்நிலை யில் சம்பவத்தன்று மாறன் வீட்டில் உள்ள பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்துவி ட்டார். பின்னர் உறவின ர்கள் மாறனை கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் ரமேஷ் காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
- கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமா வாசை, மகாலய அமாவாசை ஆடி பெருக்கு, விடுமுறை தினங்கள் உள்பட ஆண்டு மமழுவதும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபடுகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் பலர் ஆற்றில் நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்தது. கடந்த மாதம் முதல் ஆடி அமாவாசை வந்தது. இதை தொடர்ந்து இன்றும் ஆடி அமாவாசை அனுஷ்டி க்கப்பட்டது.
ஆடி அமவாசையை யொட்டி பவானி கூடுதுறைக்கு இன்று அதிகாலை முதலே ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடு ம்பத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
இதையடுத்து தங்கள் குடும்பத்துடன் வந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, மற்றும் மற்றும் பரிகார பூஜைகள் செய்தனர்.
ஆடி அமாவாசை இன்று மதியம் வரை மட்டுமே உள்ளதால் இன்று அதி காலையிலேயே பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்திரு ந்தனர். தொடர்ந்து கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காண ப்பட்டது.
பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.
இதே போல் ஆடி அமாவாசையையொட்டி கொடு முடி காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர். மேலும் பொ துமக்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் மு ன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் திருமண தடை தோஷ பரிகார பூஜை செய்தனர்.
இதனால் கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை யொட்டி போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது.
- சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த வருடம் கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற நிலை ஏற்பட்டது. விவசாயிகள் 15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனை ஏற்று திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி நேற்று மாலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில மணி நேரத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் தற்போது தண்ணீர் திறந்தால் பிரச்சனை ஏற்படும் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கீழ் பவானி பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாளை விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
- கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தற்கொலை குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம், சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ரிதன்யா (17). கோபியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் மற்றொரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க அவருக்கு சீட் கிடைத்தது. இதில் படிக்க ரிதன்யா விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் அவர் தெரிவித்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து கலை கல்லூரியிலேயே ரிதன்யாவை படிக்க பெற்றோர் வற்புறுத்தினர்.
இதனால் மனவேதனையில் இருந்த ரிதன்யா சம்பவத்தன்று இரவு பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ரிதன்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரிதன்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார்.
- திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் வித்யா மாதங்கி டாக்டராக உள்ளார்.
இந்நிலையில் வித்யா மாதங்கியின் 3 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஆள் தேவைப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த விஜயராமு என்பவரின் மகள் மீரா என்கிற பிரதிமீனா (18) என்பவரை மாதம் ரூ.18,000 சம்பளத்துக்காக வேலைக்கு சேர்த்து உள்ளனர். அவரை வீட்டில் ஒரு அறையிலேயே தங்க வைத்து கொடுத்துள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த 4 -வது நாளில் மீரா தனது தந்தை இறந்து விட்டார் என்று ஒரு பேக்கில் துணியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். பின்னர் வேலைக்கு வரவில்லை.
ஜோதி வெங்கட்ராமன் பலமுறை மீராவை போனில் தொடர்பு கொண்டு வேலைக்கு வருமாறு கூறியுள்ளார். அவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் மீராவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று சோதனையிட்டார். அப்போது வெள்ளி பொருட்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகள் மட்டும் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சடைந்த ஜோதி வெங்கட்ராமன் பூஜை அறையில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் சரி பார்த்துள்ளார். அப்போது ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மீராவை விசாரணைக்கு வருமாறு காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மீரா போலீசாரிடம் வெள்ளிப் பொருட்களை திருடியதற்கான ஆதாரம் உள்ளதா? சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளதா? எதை வைத்து என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு போலீசாரை திணறடித்தார். இதனை அடுத்து போலீசார் அவரிடம் கைரேகை பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தப் போவதாக கூறினர். இதனால் பயந்து போன மீரா வெள்ளிப் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் மீராவை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு பரபரப்பான தகவல் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
மீரா சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிறிய கிராமம். பெற்றோர் பிழைப்புக்காக திருச்சி வந்தனர். மீரா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு படிப்பு வராததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். மீராவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடன் காதல் வயப்பட்டு உள்ளார். மீரா சொந்த வீட்டிலேயே பணத்தை திருடி அதனை காதலனுக்கு செலவு செய்துள்ளார். இதனை அவர் வாடிக்கையாக செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் அவர் திருமணத்துக்காக வைத்திருந்த 10 பவுன் நகையை மீரா எடுத்துக்கொண்டு அதனை விற்பனை செய்து காதலனுடன் வீடு திரும்பி உள்ளார். இதை பெற்றோர் கண்டிக்கவே வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஏதாவது ஒரு இடத்தில் வீட்டு வேலைக்கு சேர்வதும் அங்கு கிடைக்கும் பொருட்களை திருடி கொண்டு காதலுடன் ஜாலியாக செலவு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
பின்னர் ஒரு முறை வீட்டில் பணத்தை திருடி கொண்டு காதலனுடன் கேரளா சென்றுள்ளார். போலீசார் அவரை மீட்டு கொண்டு வந்தனர். அதன் பின் மீராவை சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பிய மீரா தனது பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் சேலம் கலெக்டர் பெற்றோரை வரவழைத்து அவரிடம் மீராவை ஒப்படைத்துள்ளனர். மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய மீரா ஈரோட்டில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். அப்போதுதான் ஜோதி வெங்கட்ராமன் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிந்து கொண்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு சேர்ந்த உடனேயே ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களை திருடியுள்ளார். திருடிய வெள்ளிப் பொருட்களை ஈரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று உள்ளார்.
அந்த கடைக்கு வெள்ளி பொருட்களை விற்க சென்ற மீரா தனது தந்தை தாசில்தாராக இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ மனை செலவுக்காக பணம் தேவைப்படுவதாக கூறி வெள்ளிப் பொருட்களை விற்றுள்ளார் அதன் மூலம் ரூ.86 ஆயிரம் பணத்தை பெற்று காதலனுடன் ஜாலியாக செலவு செய்துள்ளார். மீரா பல நண்பர்கள் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுடன் ஜாலியாக இருக்க இது போன்ற வீடுகளில் வேலை செய்வது போல் நடித்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரது அறையை சோதனையிட்டபோது 14 இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகளை அடகு வைத்த ரசீதுகள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
இவர் அவர்கள் கூறினார்.
பின்னர் மீரா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மீராவின் காதலன் குறித்த விவரங்களை கடத்தூர் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் விழா நிறைவடைந்தது.
ஆனால் அடுத்த நாள் ஞாயிற்று க்கிழமை விடுமுறை என்பதால் அன்று கட்டுக்கடங்காத கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழமையும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் குருநாத சாமி கோவில் வளாகத்தில் போலீசார் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது கடைகளை அடைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கடை நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் கடந்த 2 நாட்களாக மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லை. குறைந்து காணப்பட்டது. நாளை (புதன்கிழமை) பால் பூஜை நடக்கிறது. எனவே நாளை வரை கடை நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுதந்திர தின விடுமுறையையொட்டி எதிர்பார்த்த கூட்டம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் நாளை வரை அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று புதன்கிழமை வரை கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலந்து சென்றனர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
- புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார்.
- இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாலுகா ஈங்கூர் அடுத்த நல்லகவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (59). இவரது மனைவி பூங்கொடி. தமிழ்நாடு மின்சார வாரிய த்தில் உதவி மின் பொறி யாளர் அலுவ லகத்தில் போர்மேனாக பெரியசாமி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று பெரியசாமி வீட்டின் முன்புறமுள்ள புளிய மரத்தில் ஏறி வீட்டிற்கு வரும் மின்சார லைனை ஒதுக்கி கொண்டி ருந்தார்.
அப்போது அவரது மனைவி பூங்கொடி மற்றும் கொழு ந்தனார் சுப்பிரமணியம் அதனை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத வகையில் திடீரென 15 அடி உயரம் உள்ள புளிய மரத்தில் இருந்து பெரியசாமி தவறி கீழே விழுந்தார். இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் சுப்பிரமணி இருவரும் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் பெரிய சாமியை சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
- அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று ஒரே நாளில், காசனுார் சோதனை சாவடி அருகே, தாளவாடி அருகே சினிதஹள்ளி, கோபி அருகே மொடச்சூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், வெள்ளித்திருப்பூர் அருகே மூலக்கடை பகுதி, சிறுவலுார் சமத்துவபுரம் பகுதி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் விழா நிறைவடைந்தது.
ஆனால் அடுத்த நாள் ஞாயிற்று க்கிழமை விடு முறை என்பதால் அன்று கட்டு க்கடங்காத கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் நேற்று திங்கட்கிழ மையும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் குருநாத சாமி கோவில் வளாகத்தில் போலீசார் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க முடி யாது கடைகளை அடைக்கு மாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்கள் திடீரென சாலையில் அம ர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பும், போக்கு வரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் கிடை த்ததும் அந்தியூர் இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்து க்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கடை நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் கடந்த 2 நாட்களா க மழை யின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியா பாரம் இல்லை. குறைந்து காணப்பட்டது. நாளை (புதன்கிழமை) பால் பூஜை நடக்கிறது.
எனவே நாளை வரை கடை நடத்த எங்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சுதந்திர தின விடுமுறையை யொட்டி எதிர்பார்த்த கூட்டம் வரு வதற்கு வாய்ப்பு இருப்பதால் நாளை வரை அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் ஏ.ஜி. வெங்க டாசலம் எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று புதன்கிழ மை வரை கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கு இருந்து கலந்து சென்றனர். இதனால் புதுப்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
- விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடித்தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இந்த நாட்களில் மட்டுமே கோவிலுக்கு வரும் வாகனங்களில் வருவேரிடம் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டது.
ஆனால் கடந்த 13-ந் தேதி விடுமுறை நாளிலும் விதிமீறி வாகன ஓட்டிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறியதாவது, கடந்த 12-ந் தேதி ஆடித்திருவிழா முடிந்தாலும் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலுக்கு ஆயிரக்கண க்கானேர் வந்தனர்.
இவர்களிடம் விதிமீறி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர் என்றனர்.
இது குறித்து அந்தியூர் யூனியன் அதிகாரி ஒருவர் கூறும்போது,
திருவிழா நடந்தது 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மட்டுமே வாகனங்களுக்கு வசூல் செய்ய வேண்டும். அதை மீறி வசுலித்து இருந்தால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
- ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று காலை ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
- 73 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு:
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று காலை ஈரோடு அடுத்துள்ள ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பராமரிப்பு பணி கார ணமாக அணைக்கல் பாளை யம் ஆயுதப்படை மைதா னத்திற்கு மாற்றப்பட்டது. இன்று காலை 9.05 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அலங்கரிக்கப் பட்டிருந்த தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையி னரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்று க்கொண்டார்.திறந்தவெளி ஜிப்பில் நின்று காவலர்க ளின் அணிக்கு மரியாதை பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் உடன் இருந்தா ர். இதைத்தொடர்ந்து மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். இதை த்தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணித்து கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா கவுரவித்தார்.
தொடர்ந்து காவல்து றையில் சிறப்பாக பணியா ற்றிய 43 காவலர்களுக்கும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 3 ேபருக்கும், என்.சி.சி. மாணவர்கள் 7 பேருக்கும், கால்நடை பராமரிப்புத்து றையின் சார்பில் 7 நபர்களு க்கும், துணை இயக்குநர் குடும்ப நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சார்பில் 15 நபர்களுக்கும், முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 நபர்கள், சித்த மருத்துவத்துறையின் சார்பில் 3 நபர்கள், செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் 3 நபர்களுக்கும், ஈரோடு மாநகராட்சியின் சார்பில் 14 நபர்களுக்கும்,
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் சார்பில் 25 நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கும், வட்டார போக்கு வரத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தன்னார்வ பணியா ளர்கள் 52 பேர் என மொத்தம் 364 நபர்களுக்கு பாராட்டு ச்சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
பின்னர் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்து றை, முன்னாள் படைவீர ர்நலத்துறை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் என பல்வேறு துறைகளின் சார்பில் 73 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தையொ ட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மாணவ, மாணவியர்கள் உள்பட பல்வேறு பள்ளி களை சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் கலெக்டர் மனீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழா வையொட்டி ஈரோடு மாவ ட்டத்தில் உள்ள பஸ் நிலை யங்கள், ெரயில்நிலை யம், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- பவானிசாகர் அணையிலிருந்து 805 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உ ள்ளது பவானிசாகர் அணை.
105 கொள்ள ளவு கொண்ட பவா னிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று மழை பெ ய்ததால், இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.32 அடி யாக உள்ளது. அணை க்கு வினாடிக்கு 2,289 கன அடியாக நீர் அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்துக்கு 500 கனஅடியும், காலிங்கராயன் பாசனத்துக்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானிக்கு 5 கனஅடி என மொத்தம் 805 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






