என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "224 Motorcycles are"

    • ஒவ்வொரு போலீஸ் நிலை யம் வாரியாக மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த தகவல் சேகரித்து வைக்கப் பட்டுள்ளது.
    • 3 மாதங்கள் வரை ஆயுதப்படை வளாக த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீ ஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று சாலையோரம் பல நாட்களாக நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கண்டறிந்து 224 மோட்டார்சைக்கிள்களை மீட்டு ஈரோடு ஆணைக்க ல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்த வாகனங்கள் குறி த்த விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலை யம் வாரியாக மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த தகவல் சேகரித்து வைக்கப் பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது மோட்டார் சை க்கிள் காணாமல் போயிரு ந்தால் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலை யத்தை அணுகி தங்களது மோட்டார் சைக்கி ள் எந்த நிறுவனத்தினுடை யது, பதிவு எண் போன்ற விபரங்களை உரிய ஆதார ங்களுடன் தெரிவிக்கலாம்.

    இந்த 224 மோட்டார் சைக்கிள்களும் 3 மாதங்கள் வரை ஆயுதப்படை வளாக த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

    உரிமையாளர்கள் யாரும் வாகனத்திற்கு உரி மைகோரவில்லை என்றால் அதன் பின் ஏல சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×