search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடமாடும் உணவு ஆய்வக வாகனம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    நடமாடும் உணவு ஆய்வக வாகனம்-கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வர உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை பொதுமக்கள் சேவைக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பொது மக்கள் சேவைக்கு கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தர த்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு த்துறையில் நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளின் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும்.

    இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இந்த வாகனம் சென்று வர உள்ளது. 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும்,

    21-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பவானி நகராட்சி பகுதிகளிலும், 23-ந் தேதி முதல் 24-ந் தேதி மொடக்குறிச்சி வட்டார பகுதிகளிலும், 25-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னிமலை வட்டார பகுதிகளிலும்,

    27-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளிலும், 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் ஆய்வகம் மூலம் பரி சோதனை செய்து பயனடை யலாம். எனவே பொது மக்கள் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவி த்தால் உடனடியாக நடவடி க்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்நிகழ்வின்போது, நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு தங்கவிக்னேஷ் உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×