search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliambatti Mariamman"

    • நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
    • பெண்கள் கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்கள்.

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.

    அதில் 2-வது நாளாக நேற்று பெண்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் பாடி கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு வில்வ பல பொடியினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
    • மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன், பி்ளேக் மாரியம்மன், காமாட்சி அம்மன், சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன், ஆதிபராசக்தி, மாகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×