என் மலர்
நீங்கள் தேடியது "Farmers are reluctant to"
- ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ளது.
- மழை இல்லாததால் விவசாயிகள் விதைப்பு பணியில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் மேட்டூர் மேற்கு கரை ஆகிய பாசனங்கள் உள்ளன. இதில் மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசனத்தை தவிர மற்ற பாசனங்கள் அனைத்தும் பவானிசாகர் அணையின் நீர் ஆதாரத்தை வைத்து பாசனம் பெற்று வருகின்றது.
இது தவிர சிறு அணை கள், ஏரிகள் மூலமும் பாச னம் உள்ளன. ஆனாலும் மானாவாரி நிலங்களின் சாகுபடியும் கனிசமாக இருந்து வருகின்றது. பவா னி, அந்தியூர், பெருந்துறை, கோபி, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலங்களில் பிரதா னமான நிலக்கடலை, சோள ம், தட்டை மற்றும் தானிய பயிர் வகைகள் பயிரிடப்ப ட்டு வருகின்றது. வழக்கமாக மானாவாரி நிலங்களில் ஆடி மற்றும் ஆனி மாத பட்டங்களில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கமாகும். ஆனால் இந்தாண்டு ஆடிப் பட்டத்திற்கு உழவு ஓட்டுவதற்கு வசதியாக மே மற்றும் ஜூன் மாதங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.
ஆனால் அதன் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவு இல்லாததால் மறுஉழவு செய்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போன தாக மானவாரி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பெய்ய வேண்டி ய தென்மேற்கு பருவ மழையானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மானாவாரி நில சாகுபடி பரப்பானது வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ளது. இந்தாண்டு கோடை மழை ஓரளவு கை கொடுத்த போதிலும், தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்ட து.
அவ்வப்போது பெய்தா லும் அடுத்தடுத்த நாட்களில் வெயில் தாக்கம் நிலத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகின்றது. இதனால் பயிரிட ஏற்ற சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழ க்கமாக தற்போது நிலக்கடலை விதைப்பு செய்வது வழக்கம். ஆனால் மழை இல்லாததால் விவசாயிகள் விதைப்பு பணியில் தயக்கம் காட்டி வருகின்றனர். மாவ ட்டத்தின் சராசரி மழைய ளவு 733.44 மில்லிமீட்டர். இந்தாண்டு கடந்த மாதம் வரை 274 மில்லிமீட்டர் தான் பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






