என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு ஒரு மகனும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர்.

    பவித்ராவுக்கு வீட்டில் திருமணத்திற்காக வரம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பவித்ரா கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார். இது குறித்த அவர் பெற்றோர் கேட்கும் போது தான் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக பவித்ரா கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பவித்ரா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை மோசம் அடைந்ததால் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

    எனினும் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் அந்த தியேட்டரில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
    • காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் அரச்சலூர் ரோட்டில் ஒரு சினிமா தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள கேன்டீனில் உணவு பொருட்கள் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    அதன் பேரில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் அந்த தியேட்டரில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

    அப்போது அங்குள்ள கேன்டீனில் தயாரிப்பு தேதி இல்லாத திண்பண்டங்கள், காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த கேனடீனுக்கு ரூ.1000 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

    மேலும் இது போன்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது என எச்சரித்தனர்.

    • 5 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்ற சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் லாட்டரி சீட்டு எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரித்த போது அவர்கள் சேலம் மாவட்டம் வலசையூர் சுந்தரராஜன் காலனியை சேர்ந்த பழனிவேல் என்கிற செந்தில்குமார் (47), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த யோகநாதன் (27), சேலம் மாவட்டம் கிச்சிபாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர பாண்டியன் (43), ஈரோடு ஆர்.என். பகுதி சேர்ந்த ரமேஷ் (36), வீரப்பன்சத்திரம் பகுதி சேர்ந்த ராஜன்(60) ஆகியோர் என தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து 20 கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் தனியார் சார்பில் மீன் பிடிக்கும் உரிமம் பெறப்பட்டு மீன்பிடித்து வந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

    சுசில் குட்டை, அண்ணாநகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை சேர்ந்த கூட்டுறவு சொசைட்டி மீனவர்கள் சுமார் 500 பேர் பரிசல் மூலம் மீன் பிடித்து வந்தனர். இங்கு கட்லா, ரோகு கேலுத்தி, ஜிலேபி போன்ற மீன்களை அவர்கள் பிடித்து வந்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு டன் (ஆயிரம் கிலோ) மீன்களை பிடித்து கொடுத்த போது ஒரு கிலோவுக்கு மீனவர்களுக்கு ரூ.55 வழங்கப்பட்டது.

    ஆனால் தற்போது தனியார் டெண்டர் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் அவர்களுக்கு டெண்டர் வழங்காமல் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பாக மீன்பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றனர்.

    மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை மீன்வளத்துறை இடம் கொடுத்த போது அவர்கள் மீனவர்களுக்கு ஒரு கிலோவுக்கு மீன் ஒரு 35-க்கு கொடுத்தனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபடி ஒரு கிலோ மீனுக்கு ரூ.55 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்ததால் பவானிசாகர் அணை பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலையை மீனவர்கள் அவிழ்த்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

    பவானிசாகர் அணை பகுதியில் பரிசல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்று இரவு சுசில் குட்டை, அண்ணா நகர், வெற்றிவேல் முருகன் நகர், கண்ட்ராயன் மொக்கை போன்ற பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னைக்கு சென்று தமிழ்நாடு மீன்வளத்துறை தலைவரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

    • சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.
    • 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    தென்னிந்தியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றுள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அணையின் கரையின் நீளம் 8.78 கிலோமீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டர்.பிரதான கால்வாயில் இருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு ள்ளன.

    பவானி ஆறு மாயாறு சேரும் இடத்தில் ரூ.10.50 கோடி மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப எந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்க ப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார். 68 ஆண்டுகளை கடந்தும் உறுதி தன்மையுடன் காட்சியளிக்கிறது.

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை இன்றுடன் 68 ஆண்டுகளை நிறைவு செய்து 69 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

    அணையில் ஆற்று மதகுகள் 9, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3, உபரி நீர் ஸ்பில் - வே மதகுகள் 9 என 21 மதகுகள் உள்ளன. இதில் பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில் 8 மெகாவாட் மின்சாரம் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பவானிசாகர் அணை 1955 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 1957ஆம் ஆண்டு முதல் முறையாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து பல்வேறு வருடங்களில் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 22 முறை பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 68 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளிக்கிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது.
    • இதில் விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் திட்டங்களில் முதியோர் ஓய்வூதிய பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை தராத இயலாத குடும்பத் தலைவிகள் மேற்கண்ட இந்த 3 நாட்களில் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப் பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

    இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் பல்வேறு காரணங்களுக்காக விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

    • பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி வீட்டில் இருக்கும்போது திடீரென பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.

    இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் அவரை மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து பழனிச்சாமியின் மகன் நவீன் (23) மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.

    அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
    • மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற அப்துல் கனி மார்க்கட் என்று அழைக்கப்படும் ஜவுளி சந்தை இயங்கி வருகிறது.

    இதன் ஒரு பகுதியில் ஜவுளி வணிகர்களுக்காக 50 ஆயிரம் சதுர அடியில் ரூ.54 கோடி மதிப்பில் 292 கடைகளை உள்ளடக்கிய 4 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டது.

    2019-ம் ஆண்டு தொட ங்கி கடந்த ஆண்டு பணிகள் முடித்து திறப்பு விழா செய்யப்பட்டது. இன்னும் வணிகர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படாத நிலையில், இந்த கட்டடத்தின் வாகன நிறுத்தத்திற்கான கீழ் பகுதி யில் கடந்த ஒரு வார கால மாக தண்ணீர் ஊற்றெடுத்து முழங்கால் அளவிற்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கட்டுமான பணிகள் தொடங்கும் முன் நடத்த ப்பட்ட மண் பரிசோதனை யில் இந்த இடம் கட்டு மானத்திற்கு உகந்த பகுதி அல்ல என முடிவுகள் இருந்ததாகவும், ஆனால் அதனை மறைத்து கட்டடம் கட்டப்பட்டதாகவும் வணி கர்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் தண்ணீர் அதி களவு ஊற்றெடுப்பதுடன் அஸ்திவாரம் மற்றும் அத ற்கான தூண்கள் பலமிழ க்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இத னால் வணிகர்களுக்கு கடை களை ஒதுக்கும் முன்பாக கட்டுமானத்தையும், கட்டட த்தின் உறுதி தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என வணிகர்கள், ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அமைச்சர் முத்துசாமியும் வணிக வளாகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் இன்றும் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மோட்டார் பழுதாகி உள்ள தால் வேறொரு மோட்டார் மூலம் தண்ணீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஜானகியிடம் கேட்ட போது, தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து தொழில் நுட்ப குழுவினரை (டெக்னிகல் டீம்) ஆய்வு செய்ய அறிவு றுத்தி இருப்பதாகவும், ஆய்வுக்கு பிறகே காரணம் தெரிய வரும் என்றார்.

    • கஞ்சா விற்று கொண்டிருந்த இந்திரன் என்பவரை கைது செய்தார்.
    • கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

     ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு திருட்டுத்தனமாக கஞ்சா விற்று கொண்டிருந்த ஓடைப்பள்ளம் அண்ணாத்துரை மகன் இந்திரன் (வயது 23) என்பவரை கைது செய்தார்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் திரு.வி.க. நகர் டாஸ்மாக் அருகே உள்ள பொது இடத்தில் சூரம்பட்டிவலசு சதீஷ்குமார் (48), அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (23) ஆகியோர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் டி.எஸ்.பி. முருகானந்தம் அறிவுறுத்தலின் பெயரில் கோபி அருகே உள்ள சவுண்டப்பூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் கவர்ச்சிகர திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பு, அதாவது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு ரூ.5000 தருவதாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கினைவிட அதிக வட்டி தருவதாகவும் கூறும் நபர்களிடம் பொது மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

    அந்த மோசடி நபர்கள் முதலில் ஆசை காட்டி சேர்க்கும் 10 அல்லது 20 பேருக்கு அதிக லாபம் கொடுத்து விட்டு, அதற்கு பின்னால் சேர்ப்ப வர்களுக்கு லாபத்தையும் கொடுக்காமல் முதலீடு செய்த பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்கள்.

    எந்த ஒரு நிறுவனமும் முதலீடு செய்த பணத்திற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை விட கூடுதலாக வட்டி தர முடியா து. எனவே பொதுமக்கள் கவர்ச்சிகரத் திட்டங்களை பார்த்தும் ஆசை வார்த்தைகளை கேட்டும் பணத்தை முதலீடு செய்து ஏமர வேண்டாம்.

    அதேப்போல் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாத ஏலச்சீட்டுகளிலும் சேர்ந்து பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முதலீடு செய்யும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா? கடன் ஒப்பந்த நகல் வழங்கப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து உறுதி தன்மை இருந்தால் மட்டுமே பணத்தை முதலீடு செய்யுங்கள்.

    ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஈரோடு பொருளாதார குற்றப்பி ரிவு போலீஸ் நிலையத்தை நேரில் அணுக லாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வர் அன்சர் (வயது 31). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராசிதா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    மேலும் அன்சருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகி ச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து அவரது நண்பர்கள் அன்சரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மீண்டும் சத்திய மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அன்சரே சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்சர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து மனைவி ராசிதா சத்திய மங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×