என் மலர்
நீங்கள் தேடியது "Expired food items confiscated at"
- சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் அந்த தியேட்டரில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
- காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை டவுன் அரச்சலூர் ரோட்டில் ஒரு சினிமா தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள கேன்டீனில் உணவு பொருட்கள் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன் பேரில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் அந்த தியேட்டரில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது அங்குள்ள கேன்டீனில் தயாரிப்பு தேதி இல்லாத திண்பண்டங்கள், காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த கேனடீனுக்கு ரூ.1000 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
மேலும் இது போன்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது என எச்சரித்தனர்.






