என் மலர்
ஈரோடு
- ஒவ்வொரு போலீஸ் நிலை யம் வாரியாக மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த தகவல் சேகரித்து வைக்கப் பட்டுள்ளது.
- 3 மாதங்கள் வரை ஆயுதப்படை வளாக த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீ ஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று சாலையோரம் பல நாட்களாக நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கண்டறிந்து 224 மோட்டார்சைக்கிள்களை மீட்டு ஈரோடு ஆணைக்க ல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த வாகனங்கள் குறி த்த விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலை யம் வாரியாக மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த தகவல் சேகரித்து வைக்கப் பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது மோட்டார் சை க்கிள் காணாமல் போயிரு ந்தால் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலை யத்தை அணுகி தங்களது மோட்டார் சைக்கி ள் எந்த நிறுவனத்தினுடை யது, பதிவு எண் போன்ற விபரங்களை உரிய ஆதார ங்களுடன் தெரிவிக்கலாம்.
இந்த 224 மோட்டார் சைக்கிள்களும் 3 மாதங்கள் வரை ஆயுதப்படை வளாக த்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
உரிமையாளர்கள் யாரும் வாகனத்திற்கு உரி மைகோரவில்லை என்றால் அதன் பின் ஏல சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
- புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் பீளமேடு எல்லை தோட்டம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா. சித்ரா ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது நிறுவனம் சார்பில் தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பாதி பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (48) என்பவர் சித்ராவை சந்தித்து தான் திங்களூரில் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தான் தேசியக்கொடி ஆர்டர் எடுத்து வருவதாகவும் கூறி அவரிடம் தேசிய கொடியை காண்பித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சித்ரா அவரிடம் தேசிய கொடி ஆர்டர் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அய்யப்பன் தனது மனைவி கவிதா வங்கி கணக்கிற்கு முன் பணம் போடுமாறு சித்ராவிடம் கூறியுள்ளார். இதை நம்பி சித்ரா, கவிதாவின் வங்கி கணக்கிற்கு கடந்த 4-ந் தேதி ரூ.3 லட்சத்தை முன்பணமாக அனுப்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கிற்கு மேலும் ரூ.1 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். 2 நாட்களில் வேலையை முடித்து ஆர்டர் கொடுத்து விடுவதாக கூறி அய்யப்பன் சென்றுவிட்டார்.
ஆனால் அதன் பிறகு அவர் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டார். சித்ரா பலமுறை போன் செய்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் நேரடியாக திங்களூர் சென்று அய்யப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா இது குறித்து கோவை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தார்.
அந்தப் புகார் நகல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி பெரிய குருநாதசாமி கோவில் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் குருவரெட்டியூர் -வெள்ளித்திருப்பூர் ரோட்டில் பெரிய குருநாதசாமி கோவில் அருகில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெள்ளித் திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.
- அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே அந்தியூர் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் தனியார் பேக்கரி கடை உள்ளது. நள்ளிரவில் இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பேக்கரி திண்பொருள்களை மர்ம நபர்கள் அள்ளி சென்றுள்ளனர்.
கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து அந்தியூர் ரோட்டில் மறவன் குட்டை மேட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.3ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவை பார்த்த பொழுது அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்து பூட்டை உடைத்து கடைக்குள் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதிபராசக்தி கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்று அதில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர்.
இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் ரோட்டில் பட்டஞ்சாவடியில் உள்ள ஒரு கடையிலும், அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
அம்மாபேட்டை பகுதியில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து திருடும் கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது.
- தக்காளி சில்லரை விற்பனையில் ரூ. 40-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
வழக்கமாக சாதாரண நாட்களில் 7000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது.
ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயர தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.
ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொது மக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி யதால் விலையும் சரிய தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது.
கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 5000 தக்காளி தக்காளி பெட்டி கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ. 40-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.
இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- கரும்பை வெள்ளை வேர் புழுக்கள் தாக்கி சேதப்படுத்துகிறது.
- புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் சதை பற்றுடன் பிறை நிலவு வடிவில் காணப்படும்.
ஈரோடு:
வேளாண் இணை இய க்குனர் (பொறுப்பு) முருகேசன் வெளியிட்டுள்ள செய் திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கரும்பை வெள்ளை வேர் புழுக்கள் தாக்கி சேதப்படுத்துகிறது. இப்பூச்சியின் தாய் வண்டு. இது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். கோடை மழை பெய்ததும் மண்ணில் இருக்கும் கூட்டு புழுக்களில் இருந்து வெளிவந்து கரும்பின் தூர் பகுதியில் முட் டையிடும்.
ஒரு தாய் வண்டு 30 முட்டையிடும். இதில் வெளிவரும் புழுக்கள் நீரை கடித்து சேதப்படுத்தும். வளர்ந்து புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் சதை பற்றுடன் பிறை நிலவு வடிவில் காணப்படும்.
இவற்றின் தாக்கத்தால் கரும்பு வாடி, வதங்கி, காயும். இப்பழு பருவம் 2 மாதமாகும். இவை அக்டோ பர் முதல் ஏப்ரல் மாதம் வரை மண்ணுக்குள் உறக்க நிலையில் இருந்து ஜூன், ஜூலையில் வெளிவந்து தாக்கும். இவை வேம்பு, முருங்கை, கருவேல மர ங்களில் கூட்டமாக அம ர்ந்து ஓய்வெடுத்து கரும்பை தாக்கும்.
வேம்பு, முருங்கை, கருவேல் மரங்களில் கூட்ட மாக காணப்படும் வண்டு களை கிளைகளை உலுக்கி விழ செய்து அவற்றை சேகரித்து தீயிட்டு அளிக்க வேண்டும்.
காய்ந்த தூருக்கு அடியில் உள்ள புழுவை கையால் சேகரித்து அளிக்க வேண் டும். 2, 3 நாள் தண்ணீரை தேய்ப்பதால் அவை இவை இறக்கும். விளக்கு பொறி ஏக்கருக்கு ஒன்று வைத்து தாய்வண்டை கவர்ந்து அளிக்கலாம்.
மெட்டாரைசீம் அனிசோ பிலியே என்ற பச்சை பூஞ் சாணம் ஏக்கருக்கு தேவை யான 2 கிலோ 200 கிலோ மத்திய தொழு உரம் மண் புழு உரத்துடன் கலந்து பயிருக்கு இட்டு மண் அமை க்கலாம். கரும்பின் வயது 10 மாதத்துக்கு மேல் இரு ந்தால் உடன் அறுவடை செய்யலாம்.
அதிக தாக்குதல் உள்ள இடத்தில் மாற்று பயிறாக நெல்லைப் பயிரிட்டு பின் கரும்பு பயிரிடலாம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
- மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன், பி்ளேக் மாரியம்மன், காமாட்சி அம்மன், சருகு மாரியம்மன், பண்ணாரி அம்மன், ஆதிபராசக்தி, மாகாளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோமாதா பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ளது.
- மழை இல்லாததால் விவசாயிகள் விதைப்பு பணியில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் மேட்டூர் மேற்கு கரை ஆகிய பாசனங்கள் உள்ளன. இதில் மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசனத்தை தவிர மற்ற பாசனங்கள் அனைத்தும் பவானிசாகர் அணையின் நீர் ஆதாரத்தை வைத்து பாசனம் பெற்று வருகின்றது.
இது தவிர சிறு அணை கள், ஏரிகள் மூலமும் பாச னம் உள்ளன. ஆனாலும் மானாவாரி நிலங்களின் சாகுபடியும் கனிசமாக இருந்து வருகின்றது. பவா னி, அந்தியூர், பெருந்துறை, கோபி, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலங்களில் பிரதா னமான நிலக்கடலை, சோள ம், தட்டை மற்றும் தானிய பயிர் வகைகள் பயிரிடப்ப ட்டு வருகின்றது. வழக்கமாக மானாவாரி நிலங்களில் ஆடி மற்றும் ஆனி மாத பட்டங்களில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கமாகும். ஆனால் இந்தாண்டு ஆடிப் பட்டத்திற்கு உழவு ஓட்டுவதற்கு வசதியாக மே மற்றும் ஜூன் மாதங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.
ஆனால் அதன் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவு இல்லாததால் மறுஉழவு செய்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போன தாக மானவாரி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பெய்ய வேண்டி ய தென்மேற்கு பருவ மழையானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மானாவாரி நில சாகுபடி பரப்பானது வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ளது. இந்தாண்டு கோடை மழை ஓரளவு கை கொடுத்த போதிலும், தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்ட து.
அவ்வப்போது பெய்தா லும் அடுத்தடுத்த நாட்களில் வெயில் தாக்கம் நிலத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகின்றது. இதனால் பயிரிட ஏற்ற சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழ க்கமாக தற்போது நிலக்கடலை விதைப்பு செய்வது வழக்கம். ஆனால் மழை இல்லாததால் விவசாயிகள் விதைப்பு பணியில் தயக்கம் காட்டி வருகின்றனர். மாவ ட்டத்தின் சராசரி மழைய ளவு 733.44 மில்லிமீட்டர். இந்தாண்டு கடந்த மாதம் வரை 274 மில்லிமீட்டர் தான் பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வர உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தின் பயன் பாட்டினை பொதுமக்கள் சேவைக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பொது மக்கள் சேவைக்கு கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உணவு பொருட்களின் தர த்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு த்துறையில் நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளின் அடிப்ப டையில் நடவடிக்கை எடுக்க இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த நடமாடும் ஆய்வு வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு இந்த வாகனம் சென்று வர உள்ளது. 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும்,
21-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பவானி நகராட்சி பகுதிகளிலும், 23-ந் தேதி முதல் 24-ந் தேதி மொடக்குறிச்சி வட்டார பகுதிகளிலும், 25-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னிமலை வட்டார பகுதிகளிலும்,
27-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளிலும், 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் ஆய்வகம் மூலம் பரி சோதனை செய்து பயனடை யலாம். எனவே பொது மக்கள் உணவுப்பொருள்கள் தொடர்பான புகார்களை 9444042322 என்ற கைபேசி எண்ணில் புகார் தெரிவி த்தால் உடனடியாக நடவடி க்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
இந்நிகழ்வின்போது, நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு தங்கவிக்னேஷ் உள்பட பலர் உள்ளனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 228 கனஅடியாக குறைந்து ள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 955 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.08 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.88 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும் உள்ளது.
- சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை ஏதேனும் நடை பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு டவுண், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கொல்லம்பாளையம், சென்னிமலை, பவானி, பங்களாபுதூர், புளியம்பட்டி ஆகிய பகுதி களில் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரம ணியன் (வயது 56),
சென்னி மலை துரைசாமி (60), ஈரோடு அதியமான் நகர் மாதேஸ்வரன் (40), மும்பை யை சேர்ந்த கார்த்தி, பங்க ளாபுதூர் கௌதம் (26), கருவம்பாளையம் ராமசாமி (57), குள்ளம்பாளையம் நடராஜ் (31), எண்ணமங்கலம் சசி (39) ஆகியோரை போலீ சார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 51 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் பெருந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ராஜ மாணிக்கம் (44) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த 8 மது பாட்டி ல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- கோம்பைத்தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குத்தியலத்தூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலை குத்தியலத்தூர் பள்ளம் ஓடையில் ரூ.333.40 லட்சம் மதிப்பீட்டில் உய ர்மட்ட பாலம் கட்டும் பணி யினையும், கடம்பூர் மாக்கம் பாளையம் சாலை சர்க்கரை பள்ளம் ஓடையில் ரூ.335.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும்,
குத்தியலத்தூர் ஊராட்சி அரிகியம் மேலூர் பகுதியில் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மே ல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியி னையும் நேரில் சென்று பார்வையி ட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள பொ துமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதியில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கூத்தம் பாளையம் ஊராட்சி கோம்பைத்தொட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் கட்டப்பட்டு வருவதையும்,
அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்க ன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், மாக்கம்பா ளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் வேளா ண்மை இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,
குன்றி ஊராட்சி கோவி லூர் பகுதியில் பாரத பிர தம மந்திரி அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 32 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
குத்தியலத்தூர் ஊராட்சி அணைக்கரை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட த்தினையும் மற்றும் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் சமை யலறை கட்டிடத்தினையும் என சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட மலைக்கிராம பகுதிகளான குத்தியலத்தூர், கூத்த ம்பாளையம் மற்றும் குன்றி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூத்தம்பாளையம் ஊராட்சி கோம்பைத்தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரை யாடினார்.
தொடர்ந்து கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர் களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வகாப், சத்தியமங்கலம் தாசிர்தார் சங்கர் கணேஷ், கூத்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, உதவி பொறியாளர்கள் முருகன், ஜெயகாந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.






