என் மலர்
நீங்கள் தேடியது "203 விண்ணப்பங்கள் ஏற்பு"
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
- 203 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
ஈரோடு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை மற்றும் அனைத்து உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி கூறியதாவது:-
மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிறப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைபெற 75 விண்ணப்பங்கள்,
புதிய தேசிய அடையாள அட்டைக்கு 61 பேர், குடிசை மாற்று வாரிய வீடு வழங்க கோரி 23 பேர், முதல்வரின் காப்பீடு திட்ட அட்டை பெற 42 பேர்,
ஏற்கனவே அட்டை பெற்றவர்களில் தங்கள் பெயர்களை சேர்க்க கோரி 5 பேர், வேலை வழங்க கோரி 15 பேர் செயற்கைக் கால் பொருத்து வதற்கான அளவீடு செய்து விண்ணப்பம் வழங்கிய 4 பேர் உள்பட 203 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அவை அனைத்தும் விரைவாக பரிசீலனை செய்து அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்ற சிறப்பு முகாம் வரும் 25-ந் தேதி கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






