search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் மாவட்ட அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில், ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்கம்
    X

    ஈரோட்டில் மாவட்ட அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில், ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்கம்

    • தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குநரும், தொழில் ஆணையரும், தொழில் வணிக இயக்குனருமான சிஜீ தாமஸ் வைத்தியன் தலைமையில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்ட ங்களை சேர்ந்த உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழி ல்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்கு விப்பு கழக அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசி ரியர்கள் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பு கூட்டுதல் சந்தை இணைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக தொழில் முனைவோர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் குறிப்பாக வேளாண் உட்கட்டமைப்பு நிதியினை பயன்படுத்துதல் தொடர்பா கவும் மற்றும் அறுவடைக்கு பின்பு உணவு பதப்படுத்துதல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொழில் முனை வோர்களுக்கு தெரிவிக்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு பதப்படு த்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழக தலைவர் அழகுசுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணி கண்டன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன் (பொறுப்பு), துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன் மற்றும் அரசு அலுலவர்கள் உள்பட ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ங்களை சார்ந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×