வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

சாலையில் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது.பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த சரலை ஏரி கருப்பராயன் கோவில் அருகே சம்பவ த்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது சாலையில் வந்து கொண்டி ருந்த லாரி அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதேபோல் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சா லையில் பூவன்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத நபர் ஓருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்கள்? போன்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com