பாம்பு கடித்து கூலித்தொழிலாளி சாவு

பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாம்பு கடித்து கூலித்தொழிலாளி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி வீட்டில் இருக்கும்போது திடீரென பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.

இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் அவரை மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து பழனிச்சாமியின் மகன் நவீன் (23) மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com