என் மலர்
நீங்கள் தேடியது "Citizens suffer due to"
- கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.
இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.
அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.






