என் மலர்
ஈரோடு
- வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டது.
- பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து போலீசுக்காக வைக்கப்பட்டுள்ள நிழற்கு டை அகற்றப்பட்டு விட்டது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பா ட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலை யோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கை யாளர்கள் அதிகம் கூடுவதால் நெருக்கடியாக உள்ளது.
இப்பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகனங்க ளும், பாதசாரிகளும் பாதுகா ப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவ ரத்தை சோதனை அடிப்ப டையில் தற்காலிகமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.
இதன்படி திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை யில் செல்லும் வகையில் இன்று முதல் மாற்றி அமைக்க ப்பட்டது.
மறுவ ழியில் வரும் வாகனங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலை யில் இணை யலாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரியார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீ ர்செல்வம் பூங்காவை அடையலாம் என அறிவுறுத்தப்பட்டு ள்ளது.
இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து போலீசுக்காக வைக்கப்பட்டுள்ள நிழற்கு டை அகற்றப்பட்டு விட்டது.
இது போல இந்த பகுதியில் பொது மக்கள் கடந்து செல்லும் வகையில் தடுப்பு கள் வைக்க ப்ப ட்டுள்ளது. மேலும் திரு வேங்கடசாமி வீதியில் போக்குவரத்து போ லீசார் வாகனங்களை ஒழு ங்கு படுத்தி கொண்டிருந்த னர்.
- சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்துள்ளா ர்.
- ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (22). இவரது தந்தை ராஜதுரை, தாய் மகாலட்சுமி, அண்ணன் சூர்யபிரகாஷ் (35), கணவர் ஜீவா. இவர்கள் 5 பேரும் கூலித்தொழிலா ளிகள். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேலைக்கு வந்த இவர்கள் 5 பேரும், சம்பவத்தன்று அதிகாலையில் பெருந்துறை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு படுத்திருந்தனர்.
அப்போது மது போதையில் இருந்த ராஜதுரை, சூர்யபிரகாஷ், ஜீவா ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுபோதை யில் அருகில் உள்ள மேம்பா லத்தில் குறுக்கும் மறுக்கு மாக ஓடிய சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து ள்ளா ர்.
இதில் த லையில் பல த்த அடி ப்ப ட்டு கிடந்த அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவ மனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சூர்யபிரகாஷ் இறந்து விட்டதாகத் தெரிவி த்தார்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அக்ரஹாரம் டாஸ்மாக் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மரப்பாளையத்தை சேர்ந்த தனுஷ்கோடி மகன் ஆனந்த் என்ற ஆன ந்தகுமார் (வயது 38),
வாணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்த னர்.
பின்னர் அவர்கள் வை த்திருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஈரோடு கிரு ஷ்ணம்பாளையம் பகுதியில் போதை பொருள் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன் (47) என்ப வரை கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவரி டமிருந்து போதை பொரு ட்களை போலீசார் பறிமு தல் செய்து செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
- கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,250 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.84 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 250 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,350 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்த அரிவாளைக்கொண்டு தாய், அண்ணனை ராமலிங்கம் தாக்கியுள்ளார்.
- கொடுமுடி போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர்.
ஈரோடு:
கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பெரியக்காள் (49). இவருக்கு சக்திவேல், ராமலிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். பெரியக்காளின் கணவர் கிட்டப்பன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இந்நிலையில் வருந்தியா பாளையத்தில் பெரிய க்காளுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய பூமி உள்ளது. இந்த பூமி சம்பந்த மாக பெரியக்காளின் இளைய மகன் ராமலிங்க த்துக்கும், பெரியக்காளுக்கும் பிரச்சனை இருந்து வந்து ள்ளது.
இந்த நிலையில் கடந்த 22- மாலை பெரி யக்காளின் மூத்த மகன் சக்திவேல் மற்றும் பெரிய க்காள் 2 பேரும் ராமலி ங்கத்திடம் வருந்தியாபாளை யத்தில் உள்ள விவசாய நிலம் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்த அரிவாளை க்கொண்டு பெரியக்கா ளையும், சக்திவேலையும் ராமலிங்கம் தாக்கியுள்ளார்.
இதனால் பெரியக்காள் மற்றும் சக்திவேலுக்கு காய ங்கள் ஏற்பட்டது. இதனை யடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற 2 பேரும், கரூரில் உள்ள அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
சம்பவம் குறித்து பெரியக்காள் அளித்த புகாரின்பேரில் கொடுமுடி போலீசார் ராமலிங்கத்தை கைது செய்தனர். அவரு க்கும் காயங்கள் இருந்ததால் அவர் தற்போது பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வகல்லூரி மருத்துவம னையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
- மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆதிபில்டர்ஸ், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (44). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேனகா உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் கட்டிலில் படுத்திருந்த மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
அதைக்கண்ட அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மேனகாவை மீட்டு பெருதுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னிமலை அருகே முகாசி பிடாரியூரில் மாபெரும் மருத்துவ முகாம் நடக்கிறது.
- நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கைத்தறி துறை உதவி இயக்குனர் பெ.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னிமலை:
சென்னிமலை வட்டா ரத்தில் உள்ள கைத்தறி நெச வாளர்கள் பயன் பெறும் வகையில் நாளை (வெள்ளி க்கிழமை) சென்னிமலை அருகே முகாசி பிடாரியூரில் மாபெரும் மருத்துவ முகாம் நடக்கிறது.
இதில் நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கை த்தறி துறை உதவி இயக்குனர் பெ.சரவணன் வே ண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு கைத்தறி துறை ஈரோடு சரகம் சார்பா க முன்னாள் முதல்-அமை ச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களு க்கான மாபெரும் மருத்துவ முகாம் நாளை (வெள்ளிக்கி ழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை சென்னிமலை அடுத்துள்ள முகாசிபிடாரியூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் இதயம், நுரையீரல், கண் உட்பட அனைத்து வித மான உருப்புகளுக்கும், நோ ய்களுக்கும் தனி தனி 36 தலை சிறந்த மருத்துவ நிபு ணர்கள் கலந்து கொ ண்டு ஆலோசனைகளும், சிகி ச்கைகளும் அளிக்க உள்ள னர்.
இந்த மாபெரும் மருத்து வ முகாமினை தமிழ் வள ர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாத ன் தொடங்கி வைக்கிறார்.
இந்த மருத்துவ முகா மில் அனைத்து கைத்தறி நெச வாளர்களும் கலந்து கொ ண்டு பயனடையுமாறு கே ட்டு கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
- 2 பேரும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.
பவானி:
பவானி காளிங்கராய ன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவருடைய மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (94) வசித்து வந்து உள்ளனர். ராஜாவின் மனை வி உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவரை தினசரி ராஜா தனது வாகனத்தில் சென்று வீட்டிற்க்கு அழைத்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டில் தாய் குஞ்சமாவை விட்டுவி ட்டு மனைவியை அழைத்து வர ராஜா சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தனது தாய் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கழுத்து மற்றும் கைகளில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றது தெரியவந்தது.
காயத்துடன் அவதி பட்டு க்கொண்டு இருந்த அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜகவர் உத்தர வுபடி பவானி டி.எஸ்.பி. சித்தோடு இ ன்ஸ்பெக்டர் உட்பட போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் சித்தோடு போலீசார் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகர் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசார ணை மேற்கொ ண்டனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.
விசாரணையில் பவானி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45), திருப்பூர் வருவாய்த்து றையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவரும், இவரின் நண்பரான நாமக்கல் மாவட்டம் குமராபா ளைய த்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலூ (47) என்பது தெரியவந்தது.
மேலும் குடிப்பழ க்கத்தி ற்கு அடிமையான இவர்கள் பணம் தேவை ப்பட்ட நிலையில் ராஜாவி ன் தாய் குஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு உள்ளே நுழைந்த 2 பேரும் மூதாட்டியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 3 பவுன் கொண்ட 2 தங்க வளையல்கள் என 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சித்தோடு போலீசார் சரவணன் மற்றும் பாலூ ஆகிய 2 பேரையும் கைது செய்து ஈரோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
- வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.
ஈரோடு:
அறச்சலூரில் உள்ள கொடுமுடி சாலை சந்திப்பில் வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
இதில் வன உயிரினங்க ளுடனான சந்திப்பின்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் வன உயிரினங்களின் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ், வனக்காவலர்கள் துரைசாமி, ராமசாமி, கோமதி, ரீனுபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
- பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4,995 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 2,589 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.
இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 73.69-க்கும், அதிகபட்சமாக ரூ. 81.18-க்கும் விற்பனையாகின.இரண்டாம் தரக் கொப்பரைகள் 2,406 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 34.86க்கும், அதிகபட்சமாக ரூ. 78.81க்கும் விற்பனையாகின. மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 83 லட்சம் ஆகும் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மனைவி சஜிதா கமரூவை காணவில்லை.
- அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், கிருஷ்ண சந்திரபூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ஷதேஹா கமரூ (30). இவரது மனைவி சஜிதா கமரூ (28). இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகனும் உள்ளனர். மகன் சொந்த ஊரில் ஷதேஹா கமரூவின் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளான்.
ஷதேஹா கமரூ தனது மனைவி, மகளுடன், ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்துள்ள வடபழனி பகுதியில் உள்ள ஒரு தே ங்காய் நார் மில்லில் குடும்ப த்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் அதிகாலை ஷதேஹா கமரூ கண் விழித்து பார்த்தபோது, அவரது மனைவி சஜிதா கமரூவை காணவில்லை. உடனடியாக தன்னுடன் வேலை செய்யும் நபர்களு டன் சேர்ந்து அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சஜிதா கமரூவை கிடைக்கவில்லை.
ஒருவேளை அவர் தங்களது சொந்த ஊருக்கு சென்றிரு க்கலாம் என நினைத்து அங்கும் விசாரித்த போது சஜிதா கமரூ அங்கும் செல்ல வில்லை என்பது தெரியவ ந்தது.
இதையடுத்து ஷதேஹா கமரூ அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான சஜிதா கமரூவை தேடி வருகின்றனர்.
- நெல் சாகுபடி செய்வதற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக நன்செய் பாசனத்தி ற்கு நெல் சாகுபடி செய்வத ற்காக கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கீ ழ்பவானி பாசனப்பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிடு வதற்கு தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால ரக விதை நெல் ரகங்க ள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் நெல், உளுந்து, பாசி ப்பயிறு, நிலக்கடலை, மஞ்ச ள் ஆகிய பயிர்களுக்கு தேவை யான தரமான விதைகள் உற்பத்தி செய்து இப்பகுதி விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பருவங்களில் பயிர் செய்வத ற்காக வழங்கி வருகிறோம்.
நெல்லில் வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதை மற்றும் உண்மை நிலை விதைகள் கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 37, ஏடீடி 51, கோ 54, பவானி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போ ன்ற நெல் ரகங்களில் விதை உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இந்த பருவ த்திற்கு தேவையான நெல் ரகங்களான கோ 51, கோ 55, ஏடீடி ஆர் 45, ஏடீடி 51 ஆகிய கிரகங்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதை நெல் இருப்பில் உள்ளது.
இதில் ஆதார விதை நெல் ஒரு கிலோ ரூ. 44-க்கும், சான்று விதை நெல் ஒரு கிலோ ரூ. 39-க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேப்போல பயிர் வகை பயிர்களான புரட்டாசி பட்டத்தில் பயிரிட ஏற்ற ரக மான வம்பன் 11 என்ற ரகம் இருப்பில் உள்ளது. ஒரு கிலோ ஒன்றுக்கு ரூ. 110-க்கு விற்பனை செய்யப்படுகி றது.
பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய த்தில் தரமான நெட்டை ரக தென்னை கன்றுகள் விற்ப னை செய்யப்பட்டு வருகிற து.
ஒரு தென்னைங்க ற்றின் விலை ரூ.75, இதை நெல் பயறு வகை விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் தேவைப்படும் பூசைகள் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக வேலை நாட்களி ல் நேரடியாக வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






