என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
    • அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் கூடிய 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இதில் கனி மார்க்கெட் வியாபாரி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் பொது ஏலத்தில் தான் கடைகள் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவி த்தது. இதனால் புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் தொட ர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கனி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி மாநகராட்சியின் சார்பில் தற்காலிக கடை அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது புதிய வணிக வளாகம் அருகே உள்ள கடைகளை காலி செய்து புதிய வணிக வளாக கடைகளை ஏலத்தில் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். இதனால் ஜவுளி வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து முறையிட்டனர்.

    இதையடுத்து ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஈரோடு நாச்சிப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகளில் ஒதுக்கீடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சின்ன மார்க்கெ ட்டில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் கடை வைத்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு சின்ன மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சந்தித்து முறையிட்டனர். 2 தரப்பு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் முத்துசாமி பேசினார்.

    இதில் ஜவுளி வியாபாரிகளுக்கு கனி மார்க்கெட் அருகே உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் 120 ஜவுளி க்க டைகள் அமைப்பதற்கான தகர செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்று முடிந்ததும் நாளை முதல் அங்கு கனி மார்க்கெட் செயல்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.
    • கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (21). இவர் கடந்த 22-4-2023 அன்று தனது பெற்றோரை கொலை செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.

    வீட்டு வந்த நாள் முதல் கார்த்தி பெற்றோரை தான் கொல்லவில்லை. என்மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர் என புலம்பி தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கூறி வந்துள்ளார். அதற்கு அக்கா கலைச்செல்வி, கார்த்திக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கலைச்செல்வி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் உள்ள விட்டத்தில் கார்த்தி தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும்.
    • கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.
    • காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகராட்சி கூட்ட அரங்கில் தமிழக அரசின் சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்பு எண் 13-ன் படி பவானி நகர் பகுதியில் புதிய தினசரி காய்கறி சந்தை கட்டி டம் கட்டுவது குறித்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.

    பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் தலைமை வகித்தார். ஆணை யாளர் மோகன் குமார், துணைத்தலைவர் மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த அவசரக் கூட்ட த்தில் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பழைய வார சந்தை ரோட்டில் அமை ந்துள்ள காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இநத காய்கறி சந்தை ரூ.1.30 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வா கத் துறை மூலம் பவானி நக ராட்சி பகுதியில் மார்க்கெட் அமைப்பது குறித்து நகர்மன்ற கூட்ட த்தொடர் நடத்தி தீர்மா னம் நிறைவேற்றி முடிவை அறிவிப்பது என நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.

    இதில் எடுக்கப்படும் முடிவுகள் நகராட்சி துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கி கட்டிடம் கட்ட பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொ ள்ளப்படும் வகையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெ ற்றது.

    பவானியில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 25 கவுன்சிலர்கள் உள்ளனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு .க. 4, சி.பி,ஐ. மற்றும் சுயேச்சை கலந்து கொண்டு இந்த தீர்மானம் குறித்து விவா தத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 16 பேர் ஆதரவும், 8 பேர் ஆதரவு இல்லை என்றும், ஒருவர் பரா மரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரி வித்தனர்.

    இதை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலே புதியதாக காய்கறி மார்க்கெட் கட்டப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களும் புகையிலை இல்லா கிராம மாக அறிவிக்கப்பட்டது.
    • விழாவின் நினைவாக மரக்கன்றும் நடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சா ரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் முதல் புகையிலை இல்லா கிராமங்களை உரு வாக்கிட அந்தந்த கிராம ங்களில் கூட்டங்கள் நடத்தி, மக்களிடமும், வியாபா ரிகளிடம் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று, புகையிலை இல்லா கிராமமாக அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    அதன்படி, சத்தியமங்கலம் அரசூர் ஊராட்சியில் உள்ள குள்ளம்பாளையம், தாசநாய க்கனூர் கிராமத்தில் புகையி லை ஒழிப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி க்கு மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட சுகா தார நலக்கல்வியாளர் சிவகு மார் முன்னிலை வகித்தர்.

    சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இளங்கோ, அரசூர் ஊராட்சி தலைவர் மலர்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் 100 நாள் பணியாளர்களுக்கு புகையி லை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய்கள் குறித்தும், இளம் தலைமு றையினரின் சமூக சீரழிவு கள் குறித்தும், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது.

    அதை த்தொடா்ந்து அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர். அதையடுத்து குள்ள ம்பாளையம், தாசநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களும் புகையிலை இல்லா கிராம மாக அறிவிக்கப்பட்டது.

    இந்த விழாவின் நினை வாக குள்ளம்பா ளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் மரக்க ன்றும் நடப்பட்டது. இந்நிக ழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி, பி.டி .ஓ. பிரேம்குமார், கடத்தூர் சப்-இன்ஸ்பெ க்டர் அப்துல் வகாப், வட்டார சுகாதார மேற்பா ர்வை யாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    சென்னிமலை வட்டா ரத்தில் குப்பிச்சிப்பா ளையம் கிராமத்தில் பாரம்பரிய வே ளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் தலைமையிலும், குப்பிச்சி பா ளையம் ஊராட்சி மன்ற தலை வர் பொன்னுச்சாமி முன்னி லையிலும் நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விதைச்சா ன்று அலுவலர் கணேசமூர்த்தி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதோடு அதன் நன்மை கள் மற்றும் அங்ககச்சான்று பெறுவ தற்கான நடைமுறை கள் இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், உழவர் தொகுப்புகள் உருவா க்குதல் போன்றவற்றை தெளி வாக விளக்கிக் கூறினார்.

    சென்னிமலை வேளா ண்மை உதவி இயக்குநர் சாமு வேல் அங்கக வேளாண்மை முறையில் பயிர்சாகுபடி செ ய்வதால் என்னென்ன பய ன்கள் என்பது குறித்து பேசி னார். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலு வலர் யுவராஜ் மண் பரிசோ தனை குறித்தும் மண் மாதிரி கள் எடுப்பது குறித்தும் விள க்க மாக எடுத்து கூறினார்.

    மேலும் இப்பயிற்சியில் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை குறித்து அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் மோகனசுந்தரம் விள க்கமாக எடுத்துரைத்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட விவசா யக்குழு விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சி க்கான ஏற்பா டுகளை உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணி, கார்த்திகேயன் மற்றும் தொகுப்பு ஒருங்கி ணைப்பா ளர் ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அறையில் அழுகிய நிலையில் செந்தில்குமார் பிணமாக கிடந்துள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் கல்லான்கரடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (43). டிராக்டர் மெக்கானிக். இவரது மனைவி தீபா (32). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    செந்தில்குமார் மதுவுக்கு அடிமையானதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் கடந்த 5 வருடங்களுக்கு முன் தீபா தனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன், கருங்கல்பா ளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    செ ந்தில்கு மார் மட்டும் பெ ரியசே மூரில் உள்ள தனது வீட்டில் தனி யாக வசி த்து வருகிறார். இ ந்த நிலை யில் சம்பவத்த ன்று காலை செந்தில்கு மாரின் வீட்டி ல் இருந்து துர்நா ற்றம் வீசியு ள்ளது. இதையடுத்து எதிர் வீட்டில் இருப்பவர் சென்று செந்தில்குமாரின் வீட்டின் கதவை தட்டியு ள்ளார்.

    ஆனால் கதவு திறக்கப்ப டாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ள னர். அங்கே உள்பக்க அறையில் அழுகிய நிலையில் செந்தில்குமார் பிணமாக கிடந்து ள்ளார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோடு டவுன் போலீசார் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.
    • தாராராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையி லை பொருள்கள் விற்பனை யை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யான சத்தி ரோடு, கொங்கல ம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள் , பெட்டிக்கடைகளில் சோத னை நடத்தினர்.

    அப்போது சத்தி ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றின் அருகி ல் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில் அங்கு தடைசெய்யப்பட்ட பான்ம சாலா, குட்கா உள்ளிட்ட அர சால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 1.562 கிலோ கிராம் விற்பனை க்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4,040 ஆகும்.

    இதையடுத்து பெட்டிக் கடை உரிமையாள ரான ஈரோ டு அடுத்துள்ள அவல்பூந்துறை பூவாண்டி வலசு பகுதியை சேர்ந்த மணி (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல கொங்கலம்ம ன் கோவில் மேற்கு வீதியில் உள்ள ஜெனரல் ஸ்டோரில் சோதனை யிட்டதில் 1.489 கிலோ கிராம் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ.20,770 ஆகும். இதையடுத்து டவுன் போலீசார் கடையின் உரிமை யாளரான ராமசாமி லைன் பகுதியை சேர்ந்த தாராராம் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கும் சப்- இ ன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • நுழைவு சீட்டும் அவர்கள் விண்ணப்பித்த இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை ப ணியாளர் தேர்வாணையத்தி ன் மூலம் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) மற்றும் ஸ்டேஷன் அதிகாரி ஆகிய காலிப்ப ணியிடத்திற்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நாளை (26-ந் தேதி), நாளைய மறுதினம் (27-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டும் அவர்கள் விண்ணப்பித்த இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கும் சப்- இ ன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, வேளாளர் என்ஜினீ யரிங் கல்லூரி ஆகிய 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை 3,567 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வானது, காலை 10 மணி க்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை மொழி திறனறி தேர்வும் நடக்கிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோட்டில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடக்கும் 2 மையங்களில் 300 போலீசாரும், தேர்வு மையத்துக்கு வெளியே 100 போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்குள் வர அனுமதிக்கப்படுவர்.

    பிரஸ்கிங் முறையில் சோதனை செய்யப்பட்ட பின் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

    செல்போன், பேக், பர்ஸ், கால்குலேட்டர், புளு டூத், டிஜிட்டல் மற்றும் எல க்ட்ரா னிக் வாட்ச் போன்ற எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொரு ட்கள் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை.

    தேர்வு மையத்தின் முன்புறம் உள்ள பாதுகாப்பு அறையில் தாங்கள் எடுத்து வரும் பொருட்களை வைத்து விட்டு, எழுது பொருள் மற்றும் நுழைவு சீட்டினை மட்டும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சம்ரேஷ் மண்டல் லூங்கியால் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மாநிலம், பர்கானா மேற்கு மாவட்டம், தெற்கு பல்பூர் பகுதியை சேர்ந்தவர் ரிச்யுமண்டல் (46). இவரது மகன் சம்ரேஷ் மண்டல் (19). இருவரும் கடந்த ஒரு மாதமாக ஈரோடு திண்டல் மாருதி நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்ரேஷ் மண்டல் சரி வர வேலைக்கு செல்லாமல் எப்போதும் போன் பேசிக்கொண்டே இருந்துள்ளார். மேலும் தந்தை ரிச்யுமண்டலிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

    ஆனால் ரிச்யுமண்டல் செலவுக்கு பணம் கொடுக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் மீண்டும் அவர் மதியம் சாப்பிட வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. ஆனால் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அதை உடைத்து பார்த்த போது வீட்டினுள் உள்ள இரும்பு கொக்கியில் சம்ரேஷ் மண்டல் லூங்கியால் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்ரேஷ் மண்டலை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ரிச்யுமண்டல் அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.
    • வனத்துறையினர் அந்த காட்டுயானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டை- அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது கரும்பு விவசாய நிலத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் புகுந்தது.

    அப்பகுதியில் விவசாயிகள் சிலர் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.

    இந்த நிலையில் யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்ததும் ஏற்கனவே ரோந்து பணியில் இருந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த காட்டு யானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

    • மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள்.
    • பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பவானி:

    பவானி பழைய வார சந்தை ரோட்டில் சுமார் 65 செண்ட் இடத்தில் பவானி காய், கனி தினசரி மார்கெட் அமைந்துள்ளது. இங்கு சுமார் 180-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த காய்கறிமார்க்கெட் நீண்ட ஆண்டுகளாக இந்த பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த வியாபரம் மற்றும் சில்லரை வியாபாரமும் நடந்து வருகிறது. மார்கட்டுக்கு பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் கொண்டு வருகிறார்கள். மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஊட்டி, மைசூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    அதே போல் கடை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள்.

    இந்த மார்க்கெட் அருகே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைந்துள்ளது. இங்கு காய்கறிகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் பவானி சேர்ந்த பொது மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் வாங்குகிறார்கள். இதே போல் திருவிழா மற்றும் விஷேசங்களுக்கு தேவையான காய்கறி, வாழை இலைகள் என பல பொருட்கள் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பகுதி ரூ.1.30 கோடி செலவில் புதிய தினசரி மார்க்கெட்டு கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் புதிய காய்கறி சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பவானி நகராட்சி சார்பில் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கூட்டம் நடந்தது.

    இதில் ஒரு தரப்பினர் பழைய இடத்தில் சந்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் புதிய பஸ் நிலையம் அருகே காய்கறி சந்தை அமைக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் பழைய பஸ் நிலையம் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இதனால் புதிய காய்கறி சந்தை அமைப்பது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படாமல் இது நாள் வரை இருந்து வந்தது.

    இந்நிலையில் பவானி நகர்மன்ற கூட்ட அரங்கில் அவசர கூட்டம் நடைபெற்றது.

    இதில் பழைய இடத்தில் புதியதாக காய்கறி மார்க்கெட்டு அமைப்பது என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தை கண்டித்தும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய காய்கறி மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) பவானி வட்டார காய், கனி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஒரு நாள் மார்க்கெட் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என வியாபாரிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டு வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் மார்க்கெட்டுக்கு செல்வதற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் என 3 வழிகள் அமைந்து உள்ளது. அந்த 3 வழி கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி தகவல் தெரியாமல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்து இருந்தனர். மார்க்கெட்டு மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதனால் பவானி நகராட்சி பகுதியில் புதிய தினசரி காய்கனி மார்க்கெட் பழைய இடத்தில் இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா அல்லது புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்படுமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    ×