என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 3 lakh 41 thousand"

    • தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 740 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்சவிலையாக ரூ.76.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.5 காசுகள், சராசரி விலையாக ரூ.78.39 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.60 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.74.89 காசுகள், சராசரி விலையாக ரூ.73.9 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்து 921-க்கு விற்பனையானது.

    ×