என் மலர்
ஈரோடு
- 2 காட்டு யானைகள் தென்னை மரத்தை சேதம் செய்தது.
- இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்த பங்கஜப்பா விவசாயி 2 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தை சேதம் செய்தது. அருகில் இருந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை இரவு 12 மணியளவில் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.
3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானையை வனப்பகுதியில் விரட்டினார்கள். யானையால் 20 தென்னை மரம் சேதம் ஆனாது.
இதனால் அபபகுதி விவசா யிகள் அச்சமடைந்த னர். யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வணப்பகுதி சுற்றி அகழி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 சதவீத வேட்டி உற்பத்தியை கூட விசைத்தறியாளர்கள் துவங்கவில்லை.
- நூல் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.
ஈரோடு:
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை யொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல் விசைத்தறி யாள ர்களுக்கு வழங்கப்பட்டு அதன் பின் உற்பத்தி தொடங்கப்படும்.
ஆனால் வேட்டி உற்பத்தி க்கான நூல் கொள்முதல் செய்வதில் டெண்டர் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் வேட்டி உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் வேட்டி உற்பத்தி செய்வதற்கான நூலினை தற்காலிகமாக வெளி மார்க்கெட்டில் குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விசைத்த றியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கந்தவேல் தமிழக அரசுக்கு அனுப்பி மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் இலவச வேட்டி உற்பத்திக்கு, 40-ம் நம்பர் காட்டன் நூல் இ-டெண்டர் மூலம் 1,000 டன் கொள்முதல் செய்ய அறிவிப்பை 20 நாளுக்கு முன் வெளியிட்டனர்.
அப்போது டெண்டர் நடத்த வில்லை. இந்நிலையில் இ-டெ ண்டர் தள்ளி வைத்து மறுடெண்டர் வரும் 31-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
தற்போதைய சூழலில் தமிழக அரசின் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்தும் குறைந்த அளவு நூல்களே உற்பத்தியாவதால் இதுவரை 10 சதவீத வேட்டி உற்பத்தியை கூட விசைத்தறியாளர்கள் துவங்கவில்லை.
எனவே 31-ந் தேதி டெண்டர் பெற்று இறுதி செய்து நூல் உற்பத்தியாகி விசைத்தறியாளர்களுக்கு கிடைக்க பல நாட்கள் ஆகும்.
எனவே விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேட்டி உற்பத்திக்கான, 40-ம் நம்பர் காட்டன் நூல், 500 டன் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
- போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பி யூர் புதுஐயம்பாளையம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணியம் (வயது 67). இவரது மகன் நவீன் ராஜ் (35). நவீன் ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்ப ட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாக கூறப்ப டுகிறது.
இதையடுத்து நவீன்ராஜ் தொடர்ந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் உடல் நிலை சரியாகாததால் நவின்ராஜ் நீண்ட நாட்க ளாக சிரமபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்நிலையில் சம்ப வத்தன்று மன உளைச்சலில் இருந்த நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். பின்னர் இதை பார்த்த நவீன்ராஜின் தாய் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
பின் னர் இது குறித்து நவீன் ராஜின் தந்தை சுப்பி ரமணியம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- டவுண் பஸ் முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
- பின்னால் வந்த கோவை-சேலம் அரசு பஸ் டவுண் பஸ் மீது மோதியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இன்று காலை கோவை-சேலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணி களுடன் கருங்கல்பாளையம் அருகே சென்று ெகாண்டி ருந்தது.
பேருந்தை குமரபா ளையம் உத்திரசாமி (வயது 57) என்பவர் ஓட்டி சென் றார். அதில் நடத்துனராக காஞ்சிகோவில் மூர்த்தி என்பவர் பணியாற்றினார்.
இதேபோல் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் டவுண் பஸ்சை திருச்செ ங்கோடை சேர்ந்த மாணி க்கம் (55) என்பவர் ஓட்டி சென்றார். இதில் நடத்து னராக நாமக்கல்லை சேர்ந்த ரவிசந்திரன் உள்ளார்.
இந்த 2 அரசு பேருந்து களும் ஒன்றன் பின் ஒன் றாக கலுங்கல்ப ளையம் சோதனை சாவடி காலிங்க ராயன் வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது டவுண் பஸ் முன்பு திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் மாணிக்கம் திடீரென பிேரக் பிடித்துள்ளார்.
இதனால் பின்னால் வந்த கோைவ-சேலம் அரசு பஸ் டவுண் பஸ் மீது மோதியது. இதில் டவுண் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது.
இந்த விபத்தில் கோ வை-சேலம் பஸ்சில் பய ணம் செய்த பயணி ஒருவரு க்கு மட்டும் காயம் ஏற்ப ட்டது. மற்ற பயணிகள் காய மின்றி உயிர்தப்பினர்.
பின் னர் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- ஆவணங்கள் இல்லாத விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கோபிசெட்டி பாளையம், காசியூர், காஞ்சிக்கோவில், பெருந்துறை பகுதிகளில் விதை ஆய்வாளர்கள் விஜயா, நவீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 10-க்கும் மேற்பட்ட தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணைகளில் சோதனை நடத்தி அதில் முறையான ஆவணங்கள் இல்லாத 12 குவிண்டால் அளவிலான நெல், வீரிய மக்காச்சோளம் மற்றும் காய்கறி விதைகளை விற்க தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 1,24,034 ஆகும்.
ஒவ்வொரு விதை விற்பனை மற்றும் நாற்று பண்ணை உரிமையா ளர்கள், விலைப்பட்டியல் அடங்கிய பதாகைகளை விவசாயிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
மேலும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை, காலாவதி பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
இதை தவறும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விதை சட்டம் 1966 மற்றும் 1983-கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
விவசாயிகள் விதைகள் மற்றும் நாற்றுகள் வாங்கும் போது விதை உரிமம் எண், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்ட ரசீதுகளை விற்பனையாளர்களிடம் இருந்து பெற்று பயன்பெறு மாறு ஆய்வின் போது தெரிவித்தனர்.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி ஊராட்சி க்கு உட்பட்ட சின்னான் குட்டை குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய விளை நிலங்களின் அருகே கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரியில் அதிக சக்தி வாய்ந்த வெடி களை பயன்படுத்தி பாறை களை வெடித்து எடுப்பதால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாய தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகி வருகின்ற னர்.
வெடிச்சத்தம் கேட்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் அதிக சத்தம் கார ணமாக கால்நடை களுக்கு மலட்டு த்தன்மை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டு கின்றனர்.
மேலும் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழ த்திற்கு பாறைகளை வெடி த்தெடுப்பதால் அப்பகுதி யில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்து ளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ள்ளது. கற்களை அதிக அளவில் பாரம் ஏற்றி செல்லும் லாரிக ளால் அப்பகுதியில் சாலைகள் சேதம் அடை ந்துள்ளது.
கல்குவாரிக்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் குவாரி உரிமையாளர்க ளுக்கு ஆதரவாக பாலம் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே உள்ள கல்குவாரிக்கு அருகே மீண்டும் ஒரு புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இது சம்பந்தமாக காரா ப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கி னார். சத்தியமங்கலம் வட்டார தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் காரப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரம்பாளையம், மாரம்பா ளையம் புதூர், வகுத்து கவுண்டன்புதூர், நடுப்பாளையம், கொமர பாளையம், தேவம்பா ளை யம், சின்னான்குட்டை கோப்பம்பாளையம், கண்டி சாலை, காரப்பாடி, கோட்ட பாளையம், பாறைப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மற்றும் விவசாயக் கூலிகள் வசித்து வருகிறோம்.
எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்குவதாக கூறப்படு கிறது.
எனவே மீண்டும் இப்பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து விவசாயிகளின் நலன் கருதி அனுமதி வழங்கக் கூடாது என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் கார ப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமசாமி, விவசாய சங்க நிர்வாகிகள் மோகன் குமார். சுப்பிரமணி.சதீஷ்குமார். முத்துக்குமார். பொன்னுசாமி, சண்முகம், வார்டு உறுப்பினர் லோக நாயகி நடராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் விவசாயி கள் பலர் கலந்து கொண்ட னர்.
- கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்து உள்ள முகாசிபிடாரியூரில் டாக்டர் கலைஞர் நூற்றா ண்டு விழாவினை முன்னி ட்டு ஈரோடு மாவட்ட கைத்தறித் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதன் தொடக்க விழா விற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ் மற்றும் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கைத்தறி நெசவாளர்களின் குறை களை கேட்டறிந்து சங்க வளாகத்தில் மரக் கன்று களை நட்டு வைத்தார்.
மேலும் கைத்தறித்துறை யின் சார்பில் சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல்,சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான தொழில் நுட்ப தறி உபகர ணங்களையும், 5 நெசவா ளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கினார்.
முன்னதாக சாமிநாதன் வேளாண்மை உழவர் நலன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமை க்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீ தேவி அசோக், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், தலை மை பொது குழு உறுப்பி னரும், முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனருமான சா.மெய்யப்பன், முகாசி பிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஸ் என்கிற சுப்பிரமணியம்,
கைத்தறி கூட்டுறவு சங்க மேலா ளர்கள் இந்திரா டெக்ஸ் சுகுமார் ரவி, காளிக்கோப் டெக்ஸ் கே.என்., சுப்பிர மணியம், சென்கோப்டெக்ஸ் சி.சுப்பிரமணியம், சென்டெ க்ஸ் பாஸ்கர், மயில் டெக்ஸ் ரகுபதி, சுவாமி டெக்ஸ் குழந்தைவேலு, கொங்கு டெக்ஸ் ராஜா,
அண்ணா டெக்ஸ் ரமேஷ், சென்குமார் டெக்ஸ் துரைசாமி, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்றோ டெக்ஸ் வெள்ளி யங்கிரி, சிரகிரி டெக்ஸ் சுரேஷ், அம்மா டெக்ஸ் கிருஷ்ண மூர்த்தி, சேரன் டெக்ஸ் அழகு என்கிற சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கைத்தறி துறை கைத்தறி அலுவலர் ஜானகி, கைத்தறி ஆய்வாளர்கள் யுவராஜ், பிரபாகர் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
- பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.25 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 856 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.53 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.59 அடியாக உள்ளது.
- ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
- 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மலையம்பாளையம் அடுத்த எழுமாத்தூர்-பாசூர் ரோடு முத்து கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் 2 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மொளாசி அடுத்த தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (25) என தெரிய வந்தது. 2 பேரும் ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுரேந்திரன், கவியரசன் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி வேளாண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- இதனால் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு பூங்கா சாலையில் இயங்கி வரும் மஞ்சள் மண்டியில் கோபி, ஈரோடு, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் பல ஆண்டுகளாக தங்களது மஞ்சள் மூட்டை களை இருப்பு வைத்து ள்ளனர். ஆண்டுக்கணக்கில் மஞ்சள் இருப்பு வைக்கும் விவசாயிகள் விலை உயரும் போது அவற்றை விற்பனை செய்வது வழக்கம்.
இதன்படி மஞ்சள் மூட்டைகளை இருப்பு வைத்திருந்த 11 விவசாயிகள் மூட்டைகளை எடுப்பதற்காக சென்று பார்த்த போது 1,300 மஞ்சள் மூட்டைகளுக்கு பதில் தேங்காய் மட்டைகள் நிரப்பிய மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரில் கிடங்கு காவலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய கிடங்கு உரிமையாளரை கைது செய்து மஞ்சள் மூட்டைகளு க்கான தொகை யை விவசாயி களுக்கு வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஈரோடு கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற வேளா ண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மஞ்சள் மூட்டை களுக்கான தொகை யை கேட்டால் கிடங்கு உரிமை யாளர் மிரட்டுவதா கவும், அவரது கிடங்குக்கு சீல் வைப்ப துடன், சொத்து க்க ளை முடக்கி பணத்தை மீட்டு த்த ருமாறு வலியுறுத்தினர்.
மஞ்சள் மூட்டைகளை திருடி விட்டு தேங்காய் மட்டை களை மூட்டைகளாக அடுக்கி தீ வைத்து அதனை விபத்து போல் ஜோடிக்க அவர்கள் திட்டமிட்டி ருந்ததாக விவசா யிகள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனால் இன்று வேளா ண்மை குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
ஈரோடு:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மா ணவிகளுக்கு அனைத்து பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செ யல் படுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக மாநகரா ட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம் படிப்படியாக தமிழ கம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அதன்படி இன்று (25-ந் தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்த ப்பட்டது.
அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிம லை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "இத்திட்டமானது முதல்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் மலைக்கி ராமங்களில் உள்ள தொடக்க ப்பள்ளிகள் என 96 பள்ளிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 8 ஆயிரத்து 903 மாணவ, மா ணவிகள் பயன்பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் மாவ ட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவுபடுத்தப்ப ட்டுள்ளது.
இதன்மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 983 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 42 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,079 அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 751 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா, துணை கலெக்டர் மணீஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, சென்னி மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ மற்றும் கல்வித்துறை அலுவ லர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொ ண்டனர்.
- அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு டவுண் போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பவானி, அந்தியூர், நம்பியூர் ஆகிய பகுதி களில் அரசு அனுமதியின்றி மதுவிற்றுக் கொண்டிருந்த சூரம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் தண்டபானி (வயது 27),
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சின்னையா (44), பவானி கண்ணாடி பாளை யத்தை சேர்ந்த அண்ணா துரை (52),
அந்தியூர் கோ ட்டைமேடு பகுதியை சேர் ந்த சுரேஷ் குமார் (44), நம்பியூர் சத்யா நகரை சேர்ந்த செல்வராஜ் (63) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல் மரப்பம்பாளையம் அருகே மது அருந்திய குற்றத்திற்காக செங்கேரிபாளையம் சௌந்தரராஜன் (37) என்பவரை சிவகிரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.






