என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மது விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மது விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

    • சட்டவிரோதமாக மது விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யபட்டனர்
    • 113 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட போலீ சார் சட்ட விரோத மது விற் பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்ப டையில் வரப்பாளையம், ஈரோடு தாலுகா, சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், கடத்தூர், பர்கூர் மற்றும் ஈரோடு டவுண் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு மதுபா னத்தை சட்டவிரோதமாக கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நம்பி யூர் தாலுகா பொலவபா ளையம் தண்டுக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ( வயது 50), ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோ ஷ்குமார் (23), புதுக்கோ ட்டை மாவட்டம் பொன்ன மராவதி கங்கானிபட்டியைச் சேர்ந்த சின்னையன் (48), தஞ்சாவூர் மாவட்டம் திரு வாரன்குறிச்சி வடபாதி கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (50), ஈரோடு பெரியசேமூர் சின்னவலசு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (47), சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் சம நகரைச் சேர்ந்த ரேவதி (46), சரசாள் (62), உக்கரம் வண்டி பாளை யத்தைச் சேர்ந்த சுப்ரமணி (65), பவானி தாலுகா கீழ்வாணி இந்திரா நகரைச் சேர்ந்த இந்திரஜித் (20), சிவகங்கை மாவட்டம் அரி யாண்டிபட்டியைச் சேர்ந்த சோலைராஜன் (36), ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருது 113 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×