என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் வெயில் தாக்கத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்
    X

    ஈரோட்டில் வெயில் தாக்கத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்

    • மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
    • வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் மாவட்டத்தில் கலந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    வீட்டுக்குள் கடும் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்றால் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதைவிட வாகன ஓட்டைகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பகுதிகளை கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் இளநீர், கரும்பு பாலை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இந்த வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இதேப்போல் வெள்ளரிக்காய், தர்பூசணி பழ வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயில் தாக்கம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மேட்டூர் ரோடு, காந்திஜி ரோடு, பெருந்துறை ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, கே.என்.கே.ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறி ச்சோடி காணப்படுகிறது.

    கடைவீதிகளிலும் இன்று கூட்டம் சுமாராகவே இருந்தது. மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.

    Next Story
    ×